8th Tamil TNPSC Notes

8th Tamil TNPSC Notes:

1) மக்கள் பண்பாட்டுடன் நெருங்கியத் தொடர்புக் கொண்டது________என நம் பாடப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

A)  பாடல்

B)  கவிதை

C)  கருத்து

D)  மொழி

ANSWER: D

2) “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!” இவ்வரிகளில் அமைந்து வந்துள்ள சொற்களில் எதுகை, மோனை இரண்டும் அமைந்துள்ள சொற்களினைத் தேர்வு செய்க.

A)  வாழ்க, நிரந்தரம்

B)  வாழ்க, தமிழ்

C)  நிரந்தரம், மொழி

D)  வாழிய, வாழியவே

ANSWER: D

3) பாரதியார் மீது கொண்ட பற்றினால் தன்னுடையப் பெயரினை மாற்றிக் கொண்டவர் யார்?

A)  காளிதாசன்

B)  காமராசன்

C)  பாரதிதாசன்

D)  சுப்புரத்தினதாசன்

ANSWER: C

4) “ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி இசைக்கொண்டு வாழியவே”இவ்வரிகளில் புகழ் என்னும் பொருளினைக் குறிக்கும் சொல்லினைக் குறிப்பிடுக.

A)  மணம்

B)  இசை

C)  கடல்

D)  வாழ்

ANSWER: B

5) தமிழர்கள் தம் மொழியினை எவ்வாறுக் கருதினர் என நம் பாடப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது?

A)  உயிராக

B)  உணர்வாக

C)  மொழியாக

D)  வேதமாக

ANSWER: A

6) எதனால் தமிழ்நாடு ஒளிர வேண்டும் என பாரதி நம் பாடப்பகுதியில் கூறுகிறார்?

A)  பழையக் கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்குவதனால்.

B)   மக்களுடையஏழ்மை நிலையில் உண்டாகியத் துன்பம் நீங்குவதனால்.

C)  அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்த அடிமைத்தனம் நீங்குவதனால்.

D)  நம்முள் இருக்கக் கூடிய மூடநம்பிக்கைகள் நீங்குவதனால்.

ANSWER: A

7) பாரதியார் இயற்றிய நூல்களில் பொருந்தாத ஒன்று.

அ. பாஞ்சாலி சபதம்

ஆ. கண்ணன் பாட்டு

இ. குடும்ப விளக்கு

ஈ. அழகின் சிரிப்பு

A)  அ மற்றும் ஆ

B)  இ மாற்றும் ஈ

C)  அ மற்றும் ஈ

D)  ஆ மற்றும் இ

ANSWER: A

8) வாழிய என்னும் சொல்லின் பொருள்.

A)  வாழ்க

B)  வளமுடன்

C)  வாழ்வித்தல்

D)  வாழவைத்தல்

ANSWER: A

9) நம்முடையத் தமிழ் பொருண்மைகள் எவற்றில் உள்ளடங்கியுள்ளது என பாரதியார் கூறுகின்றார்?

A)  உலகம்

B)  வானம்

C)  எல்லை

D)  நாடு

ANSWER: B

10) கடல்களால் சூழப்பட்டப் பகுதியினை பாரதியார் எவ்வாறு கூறுகிறார்?

A)  கடல்பகுதி

B)  நிலப்பகுதி

C)  இலக்கியப்பகுதி

D)  தமிழ்நாட்டுப்பகுதி

ANSWER: B

8th Tamil TNPSC Notes

11) தமிழ்மொழி எக்காரணத்தால் மேன்மையுற்றுச் சிறப்படைய வேண்டும் என்கிறார் பாரதி?

A)  துன்பங்கள் நீங்க

B)  அறியாமை நீங்க

C)  கல்வியறிவு நீங்க

D)  கருத்துக்கள் நீங்க

ANSWER: B

12) “தொல்லை வினைத்தரு தொல்லை அகன்று சுடர்க தமிழ்நாடே “ இவ்வரிகளில் பழமை என்னும் பொருளைக் குறித்து வரும் சொல்லினைக் குறிப்பிடுக.

A)  தொல்லை அகன்று

B)  தொல்லை வினைத்தரு

C)  தொல்லை அகன்று சுடர்க

D)  தொல்லை வினைத்தரு தொல்லை

ANSWER: B

13) எதைப் பரவச்செய்து புகழ் கொண்ட தமிழ் வாழவேண்டும் என்று பாரதியார் கூறுகின்றார்?

A)  இலக்கணம்

B)  இலக்கியம்

C)  தமிழ்

D)  புகழ்

ANSWER: B

14) கீழ்க்கண்டவற்றில் பாரதியார் பாடியத் தமிழ் பாடல் வரிகளில் பொருந்தாத ஒன்று.

A)  செந்தமிழ் நாடெனும் போதினிலே

B)  தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர்

C)  இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

D)  யாமறிந்த மொழிகளிலே சிறந்தது தமிழ்

ANSWER: C

15) தமிழ் மொழியினைப் பற்றி பாரதியார் கூறியது போல், நீ தமிழ் மொழியினைச் சிறப்பித்து எவ்வாறு கூறுவாய் என்பதில் பொருந்தாத ஒன்று.

A)  தமிழ் மொழியின் தனித்தன்மைகளைப் பற்றியும் அதன் வரலாற்றையும் சிறப்பித்து கூறுதல்.

B)  தமிழ் தாய்மொழி என்னும் பெருமிதத்தையும் அதன் புலமையையும் சிறப்பித்து கூறுதல்

C)  தமிழை விட பல சிறப்பு மொழிகளுண்டு. அவற்றில் ஒன்று என் தமிழ்மொழி எனச் சிறப்பித்தல்.

D)  தமிழின் பழமையும் அவற்றில் உள்ளப் புதுமைகளையும் படைப்புகளையும் சிறப்பித்தல்.

ANSWER: C

16) மகிழினி என்னும் மாணவியை வகுப்பறையில் ஆசிரியர் தமிழின் தனித்தன்மைகளைத் தொகுத்துக் கூறுமாறுக் கேட்கிறார்.அவளும் தமிழின் தனித்தன்மைகளை வகுப்பறையில் மாணவர்கள் முன் கூறுகிறாள்.கீழ்க்கண்டவற்றில் மகிழினி கூறியதில் உள்ள தவறான ஒன்றினைக் குறிப்பிடுக.

A)  உலகில் உள்ள பல மொழிகளில் மிகவும் பழமையான மொழி நம் தமிழ்மொழி.

B)  என்றும் அழியாச் சிறப்பினைப் பெற்று புகழுடன் வாழும் மொழி தமிழ்.

C)  தமிழ் மொழி சுமார் நூறு வருடங்களுக்கு முன் தோன்றிய பழமை வாய்ந்த மொழி.

D)  இலக்கிய மற்றும் இலக்கண வளம் வாய்ந்த சிறப்பு மிக்க மொழி நம் தமிழ்.

ANSWER: C

17) வகுப்பறையில் பாரதியின் சிறப்பினைப் பற்றி நடந்தக் கலந்தாய்வில் உனது நண்பர்களுடன் கலந்து உரையாடிக்கொண்டு இருக்கிறாய். அப்போது உனது  நண்பன் பாரதியினைப் பற்றியச் செய்திகளை உன்னிடம் கூறுகின்றான். அவன் கூறிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உன் நண்பன் கூறியதில் தவறான செய்தியினைச் சுட்டுக.

A)  நவீன தமிழ் கவிதைகளுக்கு முன்னோடியாகத் திகழும் சிறப்பு மிக்கவர் பாரதியார்.

B)  பெண்விடுதலை,சாதிமறுப்பு,தமிழர் நலன் போன்றவைக் குறித்து கட்டுரைகளை எழுதியுள்ளார்.

C)  தன் எழுத்துகளின் மூலம் மக்களின் மனதில் விடுதலை உணர்ச்சியைத் தூண்டியவர்.

D)  தான் இயற்றிய தமிழ்க் கவிதைகளின் மூலம் மட்டுமே புலமைக் கொண்டவர்.

ANSWER: D

18) தற்போதையக் காலக்கட்டத்தில் பிற மொழிகளின் பயன் அதிகமாக இருந்தாலும். தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெறும் என்னும் பாரதியின் வரிகளுக்கு ஏற்பத் தற்காலத்திலும் தமிழ் நிலைபெற்று இருக்கிறது. என்பதை நீங்கள் எந்தெந்தச் செயல்களின் மூலம் கூறுவீர்கள் என்பதில் பொருந்தாத ஒன்றினைக் குறிப்பிடுக.

A)  தமிழ்மொழியினைப் கணினியிலும் பயன்படுத்துதல்.

B)  தமிழ்மொழியினைப் பேசவேண்டும் என்ற கட்டாயவிதி

C)  தமிழ்மொழிக்கென தனிப் பல்கலைக் கழகங்கள்.

D)  தமிழ் வழியில் கல்வி கற்கும் நடைமுறை செயல்.

ANSWER: B

19) தற்காலத்தில் தமிழ்மொழி நிலைபெற்று இருந்தாலும் பிற மொழியின் அதிக வரவேற்ப்பினால் தமிழ் மொழியினைக் கற்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் கொள்வதில்லை. இந்நிலையில் தமிழின் சிறப்பினை உணர்ந்த நீ தமிழுக்காக என்ன செய்வாய்? தனிப்பட்ட முறையில் தமிழினைத் தெரிந்துக்கொள்ள நீ எவ்வாறான ஈடுபாட்டினை மேற்கொள்வாய் என்பதில் தவறானது.

A)  தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்டு அதிகமாக கற்றுக்கொள்ளுதல்.

B)  தமிழ் மொழியில் உள்ள பல நூல்களைப் படித்து தெரிந்த்துக் கொள்ளுதல்.

C)  பிற மொழிகள் தெரிந்திருப்பினும் தமிழில் உரையாடல்களை மேற்கொள்ளுதல்.

D)  பிறமொழியினை அதிகம் கற்று தமிழை வீட்டில் உள்ளவர்களிடம் மட்டும் பேசுதல்.

ANSWER: D

20) தமிழ்மொழியை முற்றிலும் தெரியாத நபர் ஒருவர் தமிழைக் கற்றுக்கொள்ள முற்படுகிறார். அவரால் பேசுவதற்குக் கற்றுக் கொண்டாளும் அவரால் தமிழில் கதைகள், பாடல்கள், உரைகள் போன்றவற்றை வாக்கியமாக அமைத்து எழுத இயலவில்லை. அதற்கானக் காரணம் என்ன என்பது குறித்து சரியாகப் பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடுக.

A)  தமிழ் உள்ள எழுத்துக்களை சரியாகப் பயன்படுத்த தெரியாமல் இருப்பதால்.

B)  தமிழில் உள்ள சொற்களைச் சரியான இடத்தில் பயன்படுத்த தெரியாமல் இருத்தல்.

C)  தமிழினைப் பற்றிய பொது அறிவினை தெரிந்துக் கொள்ளாததால்.

D)  தமிழில் உள்ள நுணுக்கமான எழுத்து,சொற்களை தெரிந்துக் கொள்ளாததால்.

ANSWER: C

8th Tamil TNPSC Notes

21) தமிழ்மொழி வாழ்த்து என்னும் பாடப்பகுதியில் கூறப்பட்டுள்ள செய்தி மற்றும் அப்பாடலை இயற்றியவர் பற்றியக் குறிப்புகளில் தவறாக அமைந்துள்ள கூற்றுகளை ஆராய்ந்துக் குறிப்பிடுக.                                                             

 கூற்று 1:     உலகில் உள்ள அனைத்தையும் தெளிவாகக்கூறும் வளமான மொழி தமிழ்மொழி எனறுக் கூறுகிறார் பாரதியார்.                                                                 

கூற்று 2:     தன்னுடைய தமிழ்மொழியின் புலமையைப் பரப்புவதன் மூலம் உலகம் மேன்மை அடையும் என்று தமிழ்மொழி வாழ்த்துப் பாடப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                                                                                                       

கூற்று 3:      பாரதியார் பன்முக ஆற்றல் கொண்டவர். மேலும் இவர் செந்தமிழ் என்னும் பத்திரிக்கையை நடத்தி தன் கவிதைகளை வெளியிட்டார்.                       

கூற்று 4:     சிந்துக்கு தந்தை, மறம் பாட வந்த மறவன், புதிய அறம் பாட வந்த அறிஞன் என பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

A)  கூற்று 1 மற்றும் 2 தவறு

B)  கூற்று 3 மற்றும் 4 தவறு

C)  கூற்று 1 மற்றும 4 தவறு

D)  கூற்று 2 மற்றும் 3 தவறு

ANSWER: D

22) தமிழ் மொழியின் பழமைப் பற்றியும் தமிழ்மொழி எவ்வாறு பிறந்தது மற்றும் எவ்வாறு பரவியது என்பது பற்றியச் செய்திகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அவற்றில் தவறானதைத் தேர்வு செய்க.

A)  தமிழ் மொழியானது குமரிக்கண்டத்தில் தோற்றம் பெற்றதாக கருதப்படுகிறது.

B)  கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி பிறந்த மூத்தகுடி தமிழ்.

C)  தமிழ் மொழியானது பிறமொழியால் இணைந்து உருவாயினும் அது மிகச்சிறந்தது.

D)  குமரிக்கண்டம் மூழ்கியப்பின் எஞ்சியிருந்த மக்களால் தமிழ் மீண்டும் மக்களிடையில் பரவியது.

ANSWER: C

23) தமிழ்மொழியினைப் பற்றிக் கவிஞர்கள் பலர் புகழ்ந்தும், சிறப்பித்தும் கூறி உள்ளனர். இவ்வாறுப் பல மொழிகள் வழக்கத்தில் இருந்தும் தமிழ்மொழி செம்மொழி என அறிவிக்கப்பட்டதன் காரணம் என்ன? செம்மொழிக்கான தகுதி என்ன? என்பதில் தவறானக் கூற்றினைக் குறிப்பிடுக.

கூற்று 1:    ஒரு மொழியினைச் செம்மொழி என அறிவிப்பதற்கு பதினொரு தகுதிகள் வேண்டும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தமிழினை செம்மொழியாக அறிவித்தனர்.                                                                                   

கூற்று 2:    மனித வாழ்வை சாதி மதமெனப் பிரிக்காமல் அகம், புறமெனப் பிரித்த பொதுமைப் பண்பினை உடையது.                                                                                    

கூற்று 3:    இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவினையும், சிறந்த இலக்கிய நூல்களையும் கொண்ட பெருமையுடைய மொழி.                                           

 கூற்று 4:     தமிழில் வடிவமைக்கப்பட்டப் பாடல்கள் இலக்கிய முறையில் அமைக்கப்பட்டிருப்பதால் இலக்கிய வளம் மிக்கது என்னும் சிறப்பினைப் பெற்றது.

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER: D

24) தமிழுக்குரிய செம்மொழித் தகுதிகளில் உயர் சிந்தனை, கலை இலக்கியத் தனித் தன்மை வெளிப்பாடு, மொழிக்கோட்பாடு, பிறமொழித் தாக்கமின்மை போன்ற நான்கு தகுதிகளும் அடங்கும் இவற்றில் தவறாக அமைந்துள்ளக் கூற்றினைத் தேர்வு செய்க.

கூற்று 1:      உயர் சிந்தனை என்பது கூறப்படும் செய்திகள் சமூகத்திற்கு பயனுள்ளதாக அமைவது மற்றும் வாழ்வியல் நெறிகளை வலியுறுத்துவது.

கூற்று 2:     தமிழ் இலக்கியங்களில் தனிப்பாடலாக இருந்தாலும் புலவர்கள் சேர்ந்து தொகுத்தப் பாடலாக இருப்பினும் அரசர்கள் மற்றும் அரசு உதவியுடன் படைப்புகளை உருவாக்கிய இலக்கியங்களில் கலை நயமும், கவிநயமும் சிறப்பித்து கூறப்படும் வகையில் அமைந்துள்ளது.                               

கூற்று 3:      உலகில் சில இனங்களுக்கென சில அடையாள மொழிகள் உள்ளன.அம்மொழியில் படைக்கப்படும் படைப்புகளின் பொதுமைப்பண்புகள் மற்றும் மொழியின் பயன்பாடுகள் அக்காலக் கட்டத்திற்கு மட்டும் பொருந்தும் வகையில் அமைந்துள்ள மொழிக் கோட்பாடினைக் கொண்டது.

கூற்று 4:      பிற மொழிகளுக்கு மூல மொழியாக விளங்கும் தனித்தன்மைக் கொண்டது. எக்காலமாயினும் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப தனக்கென இருக்கக் கூடிய இலக்கண செழுமையுடன் புதிய சொற்களை உருவாகும் தனித்தன்மை உடையது.

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER: C

25) பத்தி பிரித்தல் முறை இல்லாத ஒன்று _________.

A)  கல்வெட்டுகள்

B)  ஓலைச்சுவடிகள்

C)  பாறைகள்

D)  கோவில்கள்

ANSWER: B

26) இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் _________

A)  பாரதியார்

B)  வீரமாமுனிவர்

C)  தொல்காப்பியர்

D)  பெரியார்

ANSWER: D

27) ‘க’ என்னும் எழுத்து ________ எழுத்தாகக் கருதப்பட்டது.

A)  க

B)  கா

C)  கி

D)  கீ

ANSWER: B

28) மகர எழுத்தினைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட குறியீடு வகை________.

A)  கோடு

B)  புள்ளி

C)  வெட்டு

D)  வரி

ANSWER: B

29)  ________ மற்றும் _________ இல் வளைகோடுகளைப் பயன்படுத்தினார்கள்.

A)  அச்சு மற்றும் பாறைகளில்

B)  பாறைகள் மற்றும் ஓலைகளில்

C)  செப்பேடு மற்றும் ஓலைகளில்

D)  செப்பேடு மற்றும் அச்சுகளில்

ANSWER: C

30) ‘கௌ’ என்னும் எழுத்தினைக் குறிப்பதற்கு எத்தனைப் புள்ளிகள் பயன்படுத்தப்பட்டன?

A)  ஒன்று

B)  இரண்டு

C)  மூன்று

D)  நான்கு

ANSWER: B

8th Tamil TNPSC Notes

31) ஐகார வரிசையில் உள்ள சில எழுத்துகளினை சீர்திருத்தம் செய்தவர் ______

A)  வீரமாமுனிவர்

B)  தொல்க்காப்பியர்

C)  பெரியார்

D)  கம்பர்

ANSWER: C

32) சுழி எழுத்தினை சீர்திருத்தம் செய்தவர் ________

A)  வீரமாமுனிவர்

B)  தொல்க்காப்பியர்

C)  பெரியார்

D)  வள்ளுவர்

ANSWER: A

33) ‘ள’என்னும் துணைஎழுத்தினைப் பயன்படுத்துவதற்கு முன் எவ்வகைப் புள்ளிகளைப் பயன்படுத்தினார்கள்?

A)  உயிர்மெய்க்கு முன் இருந்த இரட்டைப்புள்ளி

B)  உயிர்மெய்க்கு பின் இருந்த இரட்டைப்புள்ளி

C)  உயிர்மெய்க்கு மேல் இருந்த இரட்டைப்புள்ளி

D)  உயிர்மெய்க்கு கீழ் இருந்த இரட்டைப்புள்ளி

ANSWER: B

34) ‘கை’என்னும் எழுத்தினைக் குறிப்பதற்கு புள்ளிகளை எந்த இடத்தில் பயன்படுத்தினர்?

A)  எழுத்தின் இடதுபுறத்தில்

B)  எழுத்தின் வலதுபுறத்தில்

C)  எழுத்தின் மேல் பகுதியில்

D)  எழுத்தின் கீழ் பகுதியில்

ANSWER: A

35) குறில் எழுத்துகளைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களில் பொருந்தாதவை.

அ. துணைக்கால்

ஆ. இணைக்கொம்பு

இ. ஒற்றைக்கொம்பு

 ஈ. இரட்டைக்கொம்பு

A)  அ மற்றும் ஆ

B)  இ மற்றும் ஈ

C)  ஆ மற்றும் ஈ

D)  அ மாற்று இ

ANSWER: C

36) நெடில், குறில் இரண்டினையும் பொதுவாக அமையாத இணையெழுத்து _______.

A)  துணைக்கால்

B)  இணைக்கொம்பு

C)  ஒற்றைக்கொம்பு

D)  கொம்புக்கால்

ANSWER: B

37) புள்ளிகள் இல்லாமல் அமைந்திருந்த சில எழுத்துகளை எவ்வாறு குறில், நெடில் என அடையாளம் கண்டனர்?

A)  எழுத்துகள் அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து.

B)  எழுத்துகள் அமைந்துள்ள வரிசைகளைப் பொறுத்து.

C)  எழுத்துகள் அமைந்துள்ள அளவினைப் பொறுத்து.

D)  எழுத்துகள் அமைந்துள்ள கோடுகளைப் பொறுத்து.

ANSWER: A

38) கல்வெட்டுகளில் இருந்த எழுத்துகளையே தொடர்ந்து பயன்படுத்தி வராமல் காலப்போக்கில் எழுத்துகள் மாற்றம் அடைந்ததற்கான காரணம் என்ன?

A)  முன்பிருந்த எழுத்துகளின் அமைப்புகள் பிடிக்ககாததால்

B)  சரியான வகையில் எழுத்துகள் நிலைபெற வேண்டும் என்பதால்.

C)  பிறர் பயன்படுத்திய எழுத்துகளைத் தானும் பயன்படுத்தக் கூடாது என்பதால்.

D)  எழுத்துகள் மாற்றத்தில் ஒரு தனிமனிதனின் தேவை இருந்ததால்

ANSWER: B

39) அச்சு எழுத்துகளுக்குப் பொருந்தாமல் சில எழுத்துகள் மாற்றியமைக்கப்பட்டது. அம்மாற்றத்திற்கானக் காரணம் தெரிந்து அவற்றில் சரியானவற்றைக் குறிப்பிடுக.  

அ)   சில எழுத்துகளை அச்சிடுவதற்கு தனித்தனி எழுத்து முறைகள் பயன்பட்டதால்.

ஆ)     பழைய எழுத்துகளை தட்டச்சு செய்வதற்கு பல இடையூறுகள் இருந்ததால்.

இ)     பழைய எழுத்துகளில் அதிக புரிதலின்மை இல்லாமல் இருந்ததால்.        

ஈ)      பழைய எழுத்துகளில் மாற்றத்தினால் மட்டுமே சரியான பொருள் கிடைக்கும் என்பதால்.

A)  அ மற்றும் ஆ சரி

B)  ஆ மாற்று ஆ சரி

C)  அ மற்றும் இ சரி

D)  ஆ மற்றும் ஈ சரி

ANSWER: A

40) எழுத்துக்களில் மற்றும் மாற்றம் ஏற்படவில்லை நாம் தற்போது எழுதப்படும் எண்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் எண்கள் ஒவ்வொன்றிக்கும் தமிழ் எழுத்துகள் தமிழர்கள் தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவ்வாறு 1994 மற்றும் 1856 போன்ற எண்களுக்கு தமிழ் எழுத்துகள் எவை என்பதை அறிந்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியானதைக் குறிப்பிடுக.

A)  உ௬௯௦, ௫கக௭

B)  க௯௮௪, உ௬௫க

C)  க௯௯௪, க௮௫௬

D)  78805660

ANSWER: C

8th Tamil TNPSC Notes

41) அகிலாவும் அவளது தங்கையும் தங்களுக்குப் பிடித்தவற்றின் பெயர்களைத் தன் வீட்டின் அருகில் இருந்த பனை ஓலையில் எழுதினார்கள் அகிலாவின் தங்கை எழுதிய ஓலைகள் கிழிந்துக்கொண்டே இருந்தது. அகிலா பயன்படுத்திய ஓலைகள் கிழியாமல் இருந்தது. அதன் காரணங்கள் என்ன என்பதில் தவறான ஒன்றைக் குறிப்பிடுக.

A)  நாம் எழுதக்கூடியவைகளின் தன்மையினை அறிந்து அதற்கேற்றவாறு எழுதுதல்.

B)  ஓலையில் எழுதக்கூடிய தன்மைகேற்ற எழுத்துகளைக் கையாளுதல்.

C)  எந்த எழுத்துகளை பயன்படுத்தினால் அந்த பொருள் பழுதுபடாது என அறிதல்.

D)  எழுத்துகளை ஓலைகளில் மெதுவாக எழுதாமல் வேகமாக எழுதுதல்.

ANSWER: D

42) மாரி என்பவன் தன் வகுப்பில் ஆசிரியர் நடத்திய தமிழ் வரிவடிவ வளர்ச்சி என்னும் பாடத்தினைப் பற்றி தன் நண்பனுடன் பேசிக்கொண்டு செல்கிறான். அப்போது, அவனுடைய நண்பன் ஈ.வே.ரா மற்றும் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி இவர்கள் இருவரும் சீர்திருத்தம் செய்த சில எழுத்துகளைக் கூறுமாறு கேட்டான்.அதற்கு மாறி கூறிய பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் சரியானதைக் குறிப்பிடுக.

A)  கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி ஏ,கெ,றா மற்றும் ஈ.வே.ரா கொ,னொ,ஒ.

B)  கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி கொ,னொ,ஒ மற்றும் ஈ.வே.ரா ஏ,கெ,றா.

C)  கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி எ.ஒ,ஓ மற்றும் ஈ.வே.ரா லை,ணை,ணா.

D)  கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி லை,ணை,ணா, ஈ.வே.ரா எ,ஓ,ஒ.

ANSWER: C

43) கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எழுத்துச் சீர்திருத்தம் எதற்காக கையாளப்பட்டது என்பதற்கானக் கூற்றுகளில் பொருந்தாதவற்றைத் தேர்வு செய்க.

கூற்று 1:     தமிழ் எழுத்துகளில் வடிவநிலையை மாற்றி அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக இருபதாம்நூற்றாண்டில் கருதப்பட்டன.                                              

கூற்று 2 :     பல அறிஞர்களின் கலந்துரையாடலுக்குப் பிறகு சில எழுத்துகள் திருத்தப்பட்டு அந்த எழுத்துகள் மாற்றம் அடைந்தன.                                                              

கூற்று 3:       இருபதாம் நூற்றாண்டில் மாற்றப்பட்ட எழுத்துகளில் க் முதல் ன் வரை உள்ள சில எழுத்துகளும் அ முதல் ஒள வரை உள்ள சில எழுத்துகளும் மாற்றப்பட்டன.                                                                                                                      

கூற்று 4:      எழுத்துகளில் சீர்திருத்தம் செய்தவர்களின் தனிப்பட்ட ஒப்புதலால் மட்டுமே மாற்றப்பட்ட எழுத்துகள் வழக்கத்திற்கு வந்தன.

A)  கூற்று 1 மற்றும் 2 தவறு

B)  கூற்று 3 மற்றும் 4 தவறு

C)  கூற்று 1 மற்றும் 4 தவறு

D)  கூற்று 3 மற்றும் 2 தவறு

ANSWER: B

44) வீரமாமுனிவரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம் பற்றிய தகவல்களில் சரியானதைக் குறிப்பிடுக.

A)  வீரமாமுனிவரின் சீர்திருத்தத்திற்கு முன் துணைக்காலினையும் ர என்றே எழுதினார்.

B)  ர என்னும் துணைக்காலினைத் திருத்தி தற்போது வழங்கும் துணைக்காலாக மாற்றியவர் வீரமாமுனிவர்.

C)  ஏகாரம், ஓகாரம் போன்ற எழுத்துகளை எகரம், ஒகரம் என குறில் எழுத்துகளாக மாற்றினார்.

D)  கெ,கொ இரண்டும் குறில் என்றும் கே,கோ போன்ற இரண்டும் நெடில் என்றும் சீர்திருத்தம் செய்தார்.

ANSWER: C

45) பெரியார் எழுத்துக்களில் பல சீர்திருத்தங்கள் செய்திருந்தாலும் அவருடைய சில எழுத்து திருத்தங்கள் வழக்கத்தில் இல்லை. அவைகள் எது என்பதைக் கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை படித்து தேர்வு செய்க.                                      

அ)     ஐகார வரிசைகளில் சில எழுத்துகளை சீர்த்திருத்தியது.                                     

ஆ)    அகர வரிசைகளில் சில எழுத்துகளை சீர்த்திருத்தியது.                                           

இ)     ஒள என்னும் எழுத்திற்குப் பதிலாக அவ் என்னும் எழுத்தினை சீர்திருத்தியது.                                                                                                                                                        

 ஈ)      கை என்னும் எழுத்திற்குப் பதிலாக கய் என்னும் எழுத்தினை சீர்திருத்தியது.

A)  அ மற்றும் ஆ

B)  இ மற்றும் ஈ

C)  ஆ மற்றும் ஈ

D)  அ மற்றும் இ

ANSWER: D

46) காளை, கௌதாரி, கால்வாய், கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை படித்து அதற்குப் பொருத்தமான எழுத்து மாற்றத்திற்கு முன் இருந்த புள்ளிகளிடப்பட்ட எழுத்துகளில் சில எழுத்துகள் மாற்றப்பட்டுள்ளது. அவற்றில், பொருந்தக்கூடிய வார்த்தைகளைத் தேர்வு செய்க.

A)  க…ள, கெ..த.ரி, க.ல்வ.ய்

B)  .க.ள, கெ.த.ரி, க.ல்வ..ய்

C)  .க…ள, கெ..த..ரி, க.ல்வ.ய்

D)  ..க..ள, கெ.த..ரி, க.ல்வ..ய்

ANSWER: A

47) தமிழ் எழுத்துகளின் மாற்றம், எழுத்துகளின் சீர்திருத்தம் மற்றும் இவற்றின் பயன்கள் குறித்த கருத்துகளை மனதில் கொண்டு பொருந்தாத கூற்றினைத் தேர்வு செய்க.   

கூற்று 1:       எழுத்து சீர்திருத்தத்தில் சில உயிர்மெய் எழுத்துகளில் சில மாற்றங்கள் செய்தனர்.                                                                                                                                       

 கூற்று 2:       புள்ளி எழுத்துகளை படிப்பதற்கு இடையூறுகள் அதிகம் இருந்ததால் எழுத்துகளை சீர்திருத்தம் செய்தனர்.                                                                         

கூற்று 3:      குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்ற எழுத்துகள் சீர்திருத்தம் செய்யாமல் முதலில் இருந்தவாறே வழங்கி வருகிறது.                                                        

கூற்று 4:      சீர்திருத்ததின் விளைவால் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் தமிழ் மொழியினை அதிக மக்களால் கற்க முடிகிறது.

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER: C

48) கல்வெட்டில் இருந்த எழுத்துகளில் சில _______ எழுத்துகள் காணப்பட்டது.

A)  வடமொழி

B)  சமஸ்கிருதம்

C)  மலையாளம்

D)  கன்னடம்

ANSWER: A

49) இப்பொழுது நாம் எழுதும் எழுத்துகள் தொடக்கத்தில் எந்த வடிவத்தினைப் பெற்றிருந்தது?

A)  எழுத்து

B)  ஓவியம்

C)  புள்ளி

D)  ஒலி

ANSWER: A

50) பழங்காலச் செப்பேடுகளில் காணப்படும் எழுத்துகள் எத்தனை வகைகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது?

A)  ஒன்று

B)  இரண்டு

C)  மூன்று

D)  நான்கு

ANSWER: B

8th Tamil TNPSC Notes

51) ஓவிய எழுத்துகளின் வடிவங்கள் எதனைக் குறிப்பதாக மாறியது?

A)  ஒலியை

B)  எழுத்தை

C)  சொல்லை

D)  கருத்தை

ANSWER: A

52) மனிதர்கள் தங்களது பரிமாற்றங்களை ஓவியம் மற்றும் ஏதேனும் வரிவடிவங்களுடன் நிறுத்தாமல் எழுத்துகளை உருவாக்கியதற்கானக் காரணம் _______

A)  எழுத்துகள் நிலைபெற

B)  மொழி நிலைபெற

C)  கருத்துகள் நிலைபெற

D)  தகவல் நிலைபெற

ANSWER: C

53) சேர மண்டலப்பகுதிகளில் மொத்தம் எத்தனை நூற்றாண்டுகள் வட்டெழுத்துகள் புழக்கத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது?

A)  நான்கு

B)  ஐந்து

C)  ஆறு

D)  ஏழு

ANSWER: A

54) ஒலிகளின் மூலம் கருத்துகளைப் பகிர முற்பட்டதன் இறுதி விளைவு ______

A)  எழுத்துமொழி

B)  சைகைமொழி

C)  பேச்சுமொழி

D)  வழக்குமொழி

ANSWER: C

55) வட்டெழுத்து மற்றும் தமிழெழுத்து எத்தகைய வடிவங்களைக் கொண்டது?

A)  எழுத்து

B)  வரி

C)  மொழி

D)  பேச்சு

ANSWER: B

56) ________ வரி வடிவங்கள் மொழிக்கு _______ வேறுபடுகிறது.

A)  எழுத்துகளின், மொழி

B)  மொழிகளின், எழுத்து

C)  ஒலிகளின், மொழி

D)  ஒலிகளின், எழுத்து

ANSWER: A

57) சில எழுத்துகளுக்கு நிலையான வடிவமாக அமைந்தது ______

A)  புள்ளி

B)  குறுக்குக்கோடு

C)  கோடு

D)  மேற்கோடு

ANSWER: B

58) மனிதன் தோன்றிய சில காலங்களில் ஒருவருக்கொருவர் தங்களது எண்ணங்களை பாறைகளில் எவ்வாறு செதுக்கினர்?

A)  எழுத்துகளாக

B)  குறியீடுகளாக

C)  வரிகளாக

D)  வடிவங்களாக

ANSWER: B

59) பாறைகள், செப்பேடுகள், ஓலை போன்றவற்றின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் _________ அமைந்துள்ளன

A)  அளவுகள்

B)  தொடர்கள்

C)  தன்மைகள்

D)  வடிவங்கள்

ANSWER: D

60) எழுத்துகளின் தோற்றம் அக்காலம் முதல் இக்காலம் வரை எவ்வாறு வளர்ச்சிப்பெற்றுள்ளது என்பதில் தவறான ஒன்றைக் குறிப்பிடுக.

A)     தன்னுடைய செயல்களை தனக்கு பின் வருபவர்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று முதலில் பாறைகளில் வரைந்தனர்.   

B)     முதலில் தனக்கு தெரிந்த சில எழுத்துகளைக் கொண்டு பலர் தங்கள் கருத்துகளைக் பரிமாறிக்கொண்டனர்.                                                                                                            

C)     எழுத்து வடிவமானது தொடக்க காலத்தில் பாறைகளில் இருந்த குறிப்பிட்ட எழுத்து வடிவங்களில் இருந்தே தோன்றியது.                                                                 

D)     பாறைகளில் இருக்கக்கூடிய ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்திற்குரிய ஒலியாகிய சொல்லைக் குறித்தது.

ANSWER: B

8th Tamil TNPSC Notes

61) மனிதர்கள் எதற்காக சைகைகளை பயன்படுத்தினார்கள்? சைகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் பயன் என்னவாக இருந்தது என்பதை புரிந்து அதற்கு சரியானத் தகவலைக் குறிப்பிடுக.    

அ)      தாங்கள் சொல்ல விரும்பும் தகவல்களை தன் எதிரே இருப்பவர்கள் தெரிந்துக்கொள்வதற்காக.      

ஆ)     ஒலியின் மூலம் கூறுவதால் சரியான தகவல் கேட்போருக்கு சென்று சேராது என்பதற்காக.                                                                                                                                 

இ)      தங்களின் கருத்துகளை வெளிப்படுத்த எழுத்து மொழிகளைவிட சைகை மொழியே சிறந்தது என்பதற்காக.                                                                                     

ஈ)       ஒலி, எழுத்து போன்றவற்றை அறிவதற்கு முன்பே ஒருவருக்கொருவர் சைகைகளில் பேசிக்கொண்டனர்.

A)  அ மற்றும் ஆ சரி

B)  இ மற்றும் ஈ சரி

C)  அ மற்றும் ஈ சரி

D)  ஆ மற்றும் இ சரி

ANSWER: C

62) நம் முன்னோர்கள் ஆரம்பத்தில் பயன்படுத்திய சைகைமொழிகள் இன்றளவும் நடைமுறையில் இருக்கின்றது. அவ்வகை மொழிகள் தற்போது யாருக்கு பயன்படுகிறது?

A)  கை, கால்கள் ஊனமுற்றவர்களுக்கு

B)  காதுகேளாதோர், வாய்பேசாதோர்களுக்கு

C)  அனைவரும் பயன்படுத்தும் பொதுவான மொழி

D)  குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயன்படுத்தக் கூடிய மொழி

ANSWER: B

63) மொழி என்பது எவ்வாறு தோன்றி வளர்ந்தது என்பது பற்றிய தவறானக் கருத்தினைக் குறிப்பிடுக. 

A)  தன் அறிவையும் அனுபவத்தையும் பிறரிடம் கூறுவதற்காக மொழியின் உருவத்தினை சித்தரித்தனர்.

 B)  தனக்கு வேண்டிய பொருள்களின் பண்புகளை தன் செய்கைகளால் கூறி அதனைப் பெற்றனர்.

C)  குறுக்கெழுத்துகள் போல ஒரு பொருளிற்கு ஒரு எழுத்து இட்டு வழங்கி வந்தனர்.

D)  மொழியினைப்பற்றிய ஆய்வுகள் செய்து மொழியினைப் பேசுவதற்குக் கற்றுக்கொண்டனர்.

ANSWER: D

64) வரிவடிவ எழுத்துகள் குறித்த சிந்தனைகளில் தவறானதைக் குறிப்பிடுக.

A)  எழுத்து வடிவங்கள் காலத்திற்கேற்ப பல மாற்றம் அடைந்து வந்த ஒன்று.

B)  பாறைகள், ஓலைகளென அதன் தன்மைகளுக்கு ஏற்ப எழுத்துகள் வடிவமைக்கப்பட்டது.

C)  காலத்திற்கு ஏற்ப மாறுபடும் எழுத்துகளின் மாற்றத்திற்கு ஏற்ப எழுத்தின் தன்மை அமைகின்றது.

D)  பண்டைய கால வரிவடிவ எழுத்துகளிலிருந்து சிறிது மாறுபட்டவையே தற்கால எழுத்துகள்.

ANSWER: D

65) கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்து ஆராய்ந்து வட்டெழுத்துகள் பற்றிய தகவல்களில் தவறான வரிகளினைக் குறிப்பிடுக.                                                            

அ)    வட்டெழுத்துகளின் எழுத்து முறையானது வளைந்தக்கோடுகளால் எழுதப்பட்டிருக்கும்.  

ஆ)    வட்டெழுத்துகளை தமிழ் மட்டுமின்றி மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர்.                                                                                                                                    

இ)      வட்டெழுத்துகளை எழுதும் முறை ஓலைச்சுவடிகளில் மட்டுமே கையாளப்பட்டு வந்தது.                                                                                                                                            

ஈ)       கல்வெட்டுகளில் வட்டெழுத்துகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம் இல்லை எனக் கருதினார்கள்.

A)  அ மற்றும் ஆ தவறு

B)  இ மற்றும் ஈ தவறு

C)  அ மற்றும் ஈ தவறு

D)  ஆ மற்றும் இ தவறு

ANSWER: B

66) கல்வெட்டுகளின் பயன்கள் மற்றும் அவற்றின் தகவல்கள் பற்றிய கூற்றுகளில் தவறானதைக் குறிப்பிடுக.                                                                                                 

கூற்று 1:       கல்வெட்டுகளின் மூலம் தமிழர்களின் பல சிறப்புகளை அறிய முடிகிறது. மேலும் இது பல ஆண்டுகள் நிலைத்து இருக்க கூடிய ஒன்றாகவும் கருதப்பட்டது.   

கூற்று 2:      கல்வெட்டுகள், நாம் தமிழ் மொழியினைப் பற்றிய தகவல்களை அறிவதற்காகவே பயன்படுகின்றன.                                                                                                    

கூற்று 3:       மனிதன் தோன்றியக்காலம் முதல் அரசர்கள் ஆட்சிக் காலம் வரை தங்கள் வாழ்க்கை முறையினைக் கல்வெட்டுக்களால் குறிப்பிட்டுள்ளனர்.

கூற்று 4:       கல்வெட்டுகள் தற்போது மலைக் குகைகளிலும் சங்ககால நடுகற்களிலும் பெரும்பாலும் கிடைக்கப்படுகின்றன.

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER: B

67) அச்சுக்கலை என்றால் என்ன? அச்சுக்கலையின் பயன்கள் என்ன? என்பது குறித்த தகவல்களில் பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க.                                  

கூற்று 1 :    அச்சுக்கலை என்பது அச்சிடுவதற்கான பகுதிகளைக் கற்பதற்கும், அடையாளம் காண்பதற்கும் பயன்படுத்திடும் ஒரு தொழில் நுட்பக் கலையாகும்.     

கூற்று 2 :      அச்சின் மூலம் எழுத்து மற்றும் சொற்களுக்கிடையிலான இடைவெளிகளை சரிசெய்தல் போன்றவற்றையும் உள்ளடக்கும்.                             

கூற்று 3 :      பண்டையக்காலங்களில் நாணயங்களை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட அச்சுகள் அச்சுக்கலையின் முன்னோடியாகக் கருதப்படுகிறது.  

கூற்று 4 :       அச்சு முறையானது காகிதங்கள் மற்றும் நாணயங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் கலையாக ஆரம்பக்காலத்திலிருந்து இன்றளவும் கையாளப்பட்டு வருகிறது.

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER: D

68) கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் ஓலைகளில் உள்ள எழுத்து அமைப்பு முறைகள் பற்றியத் தகவல்களில் சரியானவற்றை கொடுக்கப்பட்டுள்ளக் கூற்றுகளிலிருந்து தேர்வு செய்க.                                                                                                           

  கூற்று 1 :         கல்வெட்டுகள், செப்பேடுகளில் இருக்கும் எழுத்துகளும் ஓலைச்சுவடிகளில் இருக்கும் எழுத்துகளும் வேறுபடுபவை. அவை எழுதும் கருவியாலும், முறையாலும் உண்டானவையே.                                                                              

கூற்று 2 :       ஓலைச்சுவடிகளில் உள்ள எழுத்துகள் தனித்தனியாகவும், கற்களில் செதுக்கப்படும் எழுத்துகள் சங்கிலித்தொடர் போலவும் அமைந்திருக்கும்.    

கூற்று 3 :        ஓலைகளை பட்டோலை, பொன்னோலை, மந்திர ஓலை, சபையோலை, தூது ஓலை எனப் பலவகைகளாகக் கூறியுள்ளனர்.                            

கூற்று 4 :         ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கு சிரமம் ஏற்பட்டதால் ஓலைகளுக்குப் பதிலாக துணிகளைப் பயன்படுத்தினார்கள்.

A)  கூற்று 1 மற்றும் 2 சரி

B)  கூற்று 3 மற்றும் 4 சரி

C)  கூற்று 2 மற்றும் 4 சரி

D)  கூற்று 1 மற்றும் 3 சரி

ANSWER: D

69) எழுத்துகளின் தோற்றம், தமிழ் எழுத்துகள், வரிவடிவ வளர்ச்சி இவற்றைக் குறித்து கொடுக்கப்பட்டுள்ள வரிகளினைப் படித்து தவறானவற்றை அறிந்து சரியானவற்றைக் குறிப்பிடுக.                                               

அ)      ஓவியமாக உருப்பெற்ற எழுத்துகள் நாளடைவில் ஒலி எழுத்துகளாக மாற்றம் அடைந்தன.                                                                                                                                               

 ஆ)      கோவில் சுவர்கள் மற்றும் குகைக்கோவில்களில் உள்ள எழுத்துகளால் எழுத்துகள் நிலைப்பெற்றன.                                                                                                                               

 இ)       கல்வெட்டுகளில் உள்ள தமிழெழுத்து என்பது இக்கால தமிழெழுத்துகளின் பழைய வரிவடிவமாகும்.                                                                                               

ஈ)        பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்துகள் பெரும்பாலும் வளைக்கோடுகளைக் கொண்டே அமைத்திருக்கும்.

A)  அ மற்றும் ஆ சரி

B)  அ மற்றும் இ சரி

C)  ஆ மற்றும் ஈ சரி

D)  இ மற்றும் ஈ சரி

ANSWER: B

70) செய்யுளுக்கும் மரபுக்கும் இடையே உள்ள தொடர்பை விளக்கும் நூலாக அமைவது ________ .

A)  திருக்குறள்

B)  தொல்காப்பியம்

C)  நன்னூல்

D)  அகநானூறு

ANSWER: B

8th Tamil TNPSC Notes

71) தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களாக திகழ்வன யாவை ?

A)  இயல், இசை, நாடகம்

B)  எழுத்து, சொல், பொருள்

C)  எழுத்து, இலக்கியம், பொருள்

D)  சொல், பொருள், இலக்கணம்

ANSWER KEY: B

72) வாழ்க்கைக்குரிய ஒழுங்குமுறை ஒழுக்கம். இதனைப் போல மொழிக்கான ஒழுங்குமுறை _______ ஆகும்.

A)  சொல்

B)  இலக்கணம்

C)  இலக்கியம்

D)  மரபு

ANSWER KEY: D

73) தமிழ்மொழி மரபு எனும் பாடல் பொருளதிகாரத்தில் _____ பிரிவினை உள்ளடக்கியதாகும்.

A)  பொருளியல்

B)  அகத்திணையியல்

C)  மரபியல்

D)  உவமவியல்

ANSWER KEY: C

74) உயிர் எழுத்து நீடித்து ஒலிப்பதை ________ என்பர்.

A)  உயிரளபெடை

B)  ஒற்றளபெடை

C)  குற்றியலுகரம்

D)  குற்றியலிகரம்

ANSWER KEY: A

75) “இருதிணை  ஐம்பால்  இயல்நெறி  வழாஅமைத்  திரிவுஇல்  சொல்லோடு தழாஅல்  வேண்டும் ” – இதில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருளுக்கு எதிர்சொல்லைக் கண்டறிக

A)  தழுவுதல்

B)  தவறுதல்

C)  வழங்கல்

D)  அறிதல்

ANSWER KEY: B

76) “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் ” – அடிக்கோடிட்ட சொல்லில் பயின்று வருவது __________ .

A)  மோனை

B)  எதுகை

C)  முரண்

D)  இயைபு

ANSWER KEY: A

77) “நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் ” – இப்பாடலில் ஞாலத்தைக் குறிக்கும் சொல் எதுவெனக் கண்டறிக .

A)  விசும்பு

B)  நீர்

C)  மயக்கம்

D)  உலகம்

ANSWER KEY: D

78) மரபு + நிலை என்ற சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது _________ ஆகும் .

A)  மரநிலை

B)  மரபுநிலை

C)  மரபிலை

D)  மரனிலை

ANSWER KEY: B

79) விசும்போடு – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________ ஆகும்

A)  விசும்பு + போடு

B)  விசும் + போடு

C)  விசும்பு + ஓடு

D)  விசும் + ஓடு

ANSWER KEY: C

80) “இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமை திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும் ” – இதில் பயன்படுத்துதல் என்ற பொருளை உணர்த்தும் சொல்லைக் குறிப்பிடு

A)  இருதிணை

B)  இயல்நெறி

C)  வழாஅமை

D)  தழாஅல்

ANSWER KEY: D

8th Tamil TNPSC Notes

81) “இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் ” -இத்தொடரில் வழா எனும் சொல்லை அடுத்து அ வருவதற்கான காரணமாகத் திகழ்வது ?

A)  ழா நெடில் எழுத்தை உடையதால்

B)  ழா மூன்று மாத்திரை உடையதால்

C)  ழா இரண்டு மாத்திரை உடையதால்

D)  இரு சொற்களையும் இணைத்து எழுத முடியாததால்

ANSWER KEY: B

82) பின்வருவனவற்றுள் காற்றைக் குறிக்கும் வேறு சொற்களில் அடங்காத ஒன்றினைத் தேர்வு செய்க .

A)  வளி

B)  தென்றல்

C)  புனல்

D)  வாயு

ANSWER KEY: C

83) “மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன ” – இவ்வடிகள் எதனை வலியுறுத்துகிறது ?

A)  ஐம்பால் கருதி மக்களுடன் அன்பாக இருத்தல் வேண்டும்

B)  இருதிணைகளையும் வாழ்வில் நடைமுறைப்படுத்துதல் வேண்டும்

C)  மரபுச்சொல்லைச் செய்யுளில் பயன்படுத்த வேண்டும்

D)  அனைவரிடத்தும் இயல்பாக இருத்தல் வேண்டும்

ANSWER KEY: C

84) அக்காலத்திலிருந்து இக்காலம் வரையிலும் தமிழ்மொழியை மக்கள் பேசி வருகின்றனர். இதற்குக் காரணமாக விளங்குவதைப் பாடல் (தமிழ்மொழி மரபு) வழிக் குறிப்பிடுக .

A)  தமிழைத் தாய் மொழியாகக் கொண்டதால்

B)  ஐந்து நிலங்களின் வலிமையினால்

C)  மக்கள் மொழி அறிவு உடையதால்

D)  தமிழ் பேசும் மரபு மாறாதிருப்பதால்

ANSWER KEY: D

85) ஐம்பூதங்களில் ஒன்றான நீரின் பயனைக் கருதி கீழ்க்காணும் கூற்றுகள் அமைந்துள்ளன . அவற்றுள் தவறான ஒன்றினைத் தேர்வு செய்க .                                  

கூற்று 1 :      உடலில் உள்ள சூட்டைத் தனிக்கிறது . மேலும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கிறது.                                   

கூற்று 2 :      விவசாய தொழில், தொழிற்சாலை, உணவு உற்பத்தி போன்ற பல துறைகளில் நீர் முக்கியப்பங்கு வகிக்கிறது .                                                                             

 கூற்று 3 :       பருத்தியால் உருவாக்கப்படுகிற ஆடைகள் தயாரிக்கவும், நீர் கழிவுகளை உருவாக்கவும் நீர் பெரும்பங்கு வகிக்கிறது .                                                          

கூற்று 4 :       மின்சாரத்தால் இயங்கக்கூடிய பொருட்கள் தயாரிக்க காரணமாய் இருக்கும் மின்சார உற்பத்திக்கு நீர் காரணமாகிறது .

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER KEY: C

86) உலகின் ஐம்பூதங்களில் ஒன்றான காற்று எவ்வகையில் நமக்கு பயன்படுகிறது என்பதை கீழ்க்காணும் கூற்றுகள் எடுத்துரைக்கின்றன. அவற்றில் பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க .

A)  விலங்குகள், தாவரங்கள் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு ஆக்சிஜன் பங்கு வகிக்கிறது .

B)  காற்று மாசுபாடு அடைதலின் மூலம் குழந்தைகள் பிணியுடன் வாழ்வதற்கு வழிவகைச் செய்கிறது .

C)  விதைகளை தூவி வளர்ப்பதற்கும் மகரந்த சேர்க்கை உருவாக்கத்திற்கும் காற்று உதவி புரிகிறது .

D)  மரக்கட்டை, நிலக்கரி போன்ற எரிபொருட்களை எரிப்பதற்குக் காற்று பெரும்பங்காற்றுகிறது .

ANSWER KEY: B

87) ஐம்பூதங்களில் ஒன்றான நிலம், மனிதனுக்குப் பெருமளவில் பயன்படுகிறது. இந்நிலம் இல்லையெனில் மனிதனுக்கு ஏற்படும் இடையூறைத் தேர்வு செய்க .

A)  நிலம் இல்லையெனில் இயற்கை வளங்கள் வளர இயலாமல் போய்விடும்

B)  நிலம் இல்லாததால் வாழ்வதற்குரிய இருப்பிடம் அமைக்கப்பட இயலாது

C)  நிலம் இல்லையெனில் அந்நாட்டின் பரப்பளவு கண்டறிவது கடினமாகும்

D)  தாவரங்கள் விலங்குகள் வாழ்வது கடினமாகி அழிந்து விடும்

ANSWER KEY: B

88) ஒரு பள்ளியின் மாணவர்களைப் பூக்கள் இருக்கும் நந்தவனத்திற்கு அழைத்துச் செல்கின்றனர், அப்பள்ளி வளாகம். மாணவர்கள் பல வித வண்ணங்களில் இருக்கும் பூக்களை ரசித்துக் கண்டுகளித்தனர். அப்பூக்களில் இருக்கும் வண்டுகள் சத்தமிட்டே இருந்தன . மாணவர்கள் ஆசிரியரிடம் வண்டுகள் போடும் சத்தத்தை எவ்வாறு கூறுவர் என்று கேட்கையில் ஆசிரியர் மாணவர்களிடம் எத்தகைய ஒலி மரபினைக் கூறியிருப்பார் என்று ஆராய்க .

A)  குழலும்

B)  முரலும்

C)  குனுகும்

D)  கீச்சிடும்

ANSWER KEY: B

89) கீழ்க்காணும் பாடல்களில் ஐம்பூதங்களை உள்ளடக்கிய பாடலைத் தேர்வு செய்க .

A)  “கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச் செழும்பல் குன்றம் நோக்கிப் பெருங்கலி வான மேர்தரும் பொழுதே”

B)  “இனத்த வருங்கலை பொங்கப் புனத்த கொடிமயங்கு முல்லை தளிர்ப்ப இடிமயங்கி யானும் அவரும் வருந்தச் சிறுமாலை தானும் புயலும் வரும்”

C)  “மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை”

D)  “வழியுது வழியுது வெள்ளை அருவி அருவியை முழுவதும் பருகிவிட ஆசையில் பறக்குது சின்னக்குருவி பூ வனமே எந்தன் மனம் புன்னகையே எந்தன் மதம்”

ANSWER KEY: C

90) திணைகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை உயர்திணை , அஃறிணை ஆகியனவாகும் . கீழ்க்காணும் கூற்றுகளில் உயர்திணையைக் குறிக்கும் தொடரைத் தேர்வு செய்க .

A)  மரபலகையால் பலவித பொருட்களை உருவாக்க முடியும் .

B)  சிவனுக்கு மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண் உள்ளது .

C)  விலங்கினங்களில் அதிகமாக ஓடக்கூடிய விலங்காக குதிரை உள்ளது .

D)  ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் அனைத்தும் சிறகை அடித்துக்கொண்டே பறப்பதில்லை .

ANSWER KEY: B

8th Tamil TNPSC Notes

91) பொதுவாக நிலங்களை அவற்றின் தன்மையைக் குறித்து ஐந்து வகையாகப் பிரிப்பர். அவை குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியன. அத்தகைய நிலங்களில் மேற்கொள்ளப்படும் தொழில்களைக் குறிக்கும் செய்தியினை பின்வரும் கூற்றுகள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் தவறான ஒன்றினைத் தேர்வு செய்க .   

கூற்று 1 :        குறிஞ்சி நிலத்தில் வாழ்வபவர்கள் தேன் எடுத்தல், வேட்டையாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .

கூற்று 2 :        மருதம் நிலத்து மக்கள் பொதுவாக உழவு , கலைப்பறித்தல் போன்ற தொழிலை மேற்கொண்டுத் தன் வாழ்க்கையை வாழ்ந்தனர் .                    

 கூற்று 3 :       முல்லை நிலத்து மக்கள் வரகு விதைத்தல் , களை எடுத்தல், மந்தை மேய்த்தல் போன்ற தொழிலை மேற்கொண்டு வந்தனர் .                                       

கூற்று 4 :        நெய்தல் நிலத்து மக்கள் உப்பு விற்றல், கல் அறுத்தல், போன்ற பலத் தொழில்களை மேற்கொண்டு வாழ்ந்து வந்தனர் .

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER KEY: D

92) கீழ்க்காணும் திருக்குறளில் ஐம்பூதங்களாகிய ஒன்றினை உள்ளடக்கி பயின்று வந்துள்ள திருக்குறளில் அடங்காத ஒன்றினைத் தேர்வு செய்க .

A)  விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண் பரிது.

B)  புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்

C)  ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்

D)  அல்லல் அருள்ஆள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லல்மா ஞாலங் கரி.

ANSWER KEY: C

93) தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் இன்றும் மண்ணில் அழியாமல் வாழ்ந்து வருகின்றது. அவ்வகையில் சிலம்பாட்டம் என்ற தமிழரின் கலை, இன்று அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத்தரப்படுகிறது . மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன . பழந்தமிழரின் கலை இன்று வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது எனில், இதற்கு காரணமாய் திகழ்வது எதுவென நம் பாடம் வழிக் கண்டறிக .                                              

1)        சிலம்பாட்டம் தமிழரின் வழக்கம் மாறாமல் இருப்பதனால் இக்காலம் வரை பயன்பாட்டில் உள்ளது .                   

2)        சிலம்பாட்டம் சிறப்புத் தன்மை வாய்ந்ததால் இன்று வரை சிறப்பாக விளங்குகிறது .  

3)        சிலம்பாட்டம் தற்காப்புக் கலை என்பதால் இன்று வரை காக்கும் கவசமாக உள்ளது.                                                                                                                                                      

4)       சிலம்பாட்டம், தமிழரின் வீர விளையாட்டு என்பதால் வீரர்களுக்கு முடிசூட்டும் மன்னனாய் உள்ளது .

A)  1 காரணமாய் திகழ்கிறது

B)  2 காரணமாய் திகழ்கிறது

C)  3 காரணமாய் திகழ்கிறது

D)  4 காரணமாய் திகழ்கிறது

ANSWER KEY: A

94) உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எத்தனை இடங்களுக்குப் பொருந்துவதாகக் குறிப்பிடப்படுகிறது?

A)  மூன்று

B)  நான்கு

C)  ஐந்து

D)  எட்டு

ANSWER KEY: B

95) மெய் எழுத்துகள் பிறக்கும் இடங்களில் பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க.

A)  நாக்கு

B)  மார்பு

C)  மூக்கு

D)  கழுத்து

ANSWER KEY: A

96) கீழ்க்கண்டவற்றில் எந்த உறுப்பின் முயற்சியினால் ஒலிகள் பிறப்பதில்லை?

A)  இதழ்

B)  நாக்கு

C)  கழுத்து

D)  பல்

ANSWER KEY: C

97) எழுத்துகளின் பிறப்பு வகையில் சரியான ஒன்று.

A)  இடப்பிறப்பு

B)  காலப்பிறப்பு

C)  குணப்பிறப்பு

D)  தன்மைப்பிறப்பு

ANSWER KEY: A

98) தலையினை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து ______.

A)  க்

B)  ஃ

C)  ங்

D)  ச்

ANSWER KEY: B

99)  ______ மற்றும் ______ எழுத்துகள் கழுத்திலிருந்துப் பிறக்கிறது.

A)  மெல்லின மெய், இடையின மெய்

B)  வல்லின மெய், இடையின மெய்

C)  உயிரெழுத்து, இடையின மெய்

D)  மெய்யெழுத்து,  இடையின மெய்

ANSWER KEY: C

100)  ________ எழுத்துகளை ஒலிக்கும் பொழுது வேறுபட்ட மூன்று ஒலிகளை நம்மால் கேட்க முடியும்.

A)  மெய்

B)  உயிர்

C)  உயிர்மெய்

D)  உயிர், மெய்

ANSWER KEY: A

8th Tamil TNPSC Notes

101)  மேல்வாய் என்பதன் மற்றொரு பெயர் ________.

A)  அண்ணம்

B)  மூக்கு

C)  உதடு

D)  நாக்கு

ANSWER KEY: A

102)  உயிரெழுத்துகள் உச்சரிப்பு முறையினை எத்தனை வகைகளாகப் பிரிப்பர்?

A)  ஒன்று

B)  இரண்டு

C)  மூன்று

D)  நான்கு

ANSWER KEY: B

103) எழுத்துகள் பிறப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவை _______.

A)  ஒலியணுக்கள்

B)  ஒலிஅதிர்வுகள்

C)  ஒலிவளைவுகள்

D)  ஒலிஅலைகள்

ANSWER KEY: A

104) மிடற்றில் பிறந்து காற்றினால் உருவாகி ஒலிக்கக் கூடிய எழுத்துகள் ______ .

A)  உயிரெழுத்துகள்

B)  மெய்யெழுத்துகள்

C)  உயிர்மெய்எழுத்து

D)  ஆயுதஎழுத்து

ANSWER KEY: A

105) மேல்வாய்ப் பல்லை, நாக்கின் அடிப்பகுதியின் விளிம்பு சென்று பொருந்தும் முயற்சியின் மூலம் பிறக்கப்படும் எழுத்துகள் ________.

A)  உ, ஊ, ஒ, ஓ

B)  இ, ஈ, எ, ஏ

C)  அ, ஆ

D)  ஒள, ஃ

ANSWER KEY: B

106) ஒவ்வொரு எழுத்துகள் பிறக்கும் போதும் ஒவ்வொரு விதமான ஒலிகள் வேறுபடுவதற்கு காரணம் _____.

A)  ஒலிகள் வேறுபடுவதால்

B)  எழுத்துகள் வேறுபடுவதால்

C)  வார்த்தைகள் வேறுபடுவதால்

D)  பிறக்கும் இடங்கள் வேறுபடுவதால்

ANSWER KEY: D

107) கீழ்வருவனவற்றில் ஒலிக்கும் தன்மையினைப் பொறுத்து சில எழுத்துகளுக்கு பெயர்கள் உள்ளது. அவ்வாறு “ஈரிதழ் ஒலிகள்” என்று அழைக்கப்படும் ஒலிகளையுடைய எழுத்துகளைக் குறிப்பிடுக.

A)  ல, ள

B)  ப, ம

C)  ன, ண

D)  ழ, வ

ANSWER KEY: B

108) மார்புப் பகுதியிலிருந்து பிறக்கும் எழுத்துகளில் பொருந்தாத எழுத்துகள் _______.

A)  க, ற

B)  ய, ல

C)  ச, த

D)  ட, ப

ANSWER KEY: B

109) வகுப்பில் உன்னுடன் பயிலும் சக மாணவி “ஓணான்” என உச்சரிக்கின்றாள். இந்த உச்சரிப்பிற்காக “ணா” என்னும் எழுத்தை உச்சரிக்க அவள் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவ்வகை உச்சரிப்பினைப் பயன்படுத்தி இருப்பாள்?

A)  வாயைத் திறக்கும் முயற்சியின் மூலம்

B)  இதழ்களைக் குவிக்கும் முயற்சியின் மூலம்

C)  மேல்வாய்ப் பல்லைப் பொருத்தும் முயற்சியினால்

D)  மேல்வாயுடன் இதழ்களை இணைக்கும் முயற்சியினால்

ANSWER KEY: A

110) “குழந்தை ஓவென அழுதது” இவ்வரிகளில் குழந்தை அழுததாகக் கூறப்படும் எழுத்தினை நீ எவ்வாறு உச்சரிப்பாய் எந்த உறுப்பின் அசைவின் உதவியுடன் உச்சரிப்பாய் என்பதில் சரியானதைக் குறிப்பிடுக.

A)  நாவினை நீட்டல்

B)  வாயைத் திறத்தல்

C)  இதழ்களை இணைத்தல்

D)  இதழ்களைக் குவித்தல்

ANSWER KEY: D

8th Tamil TNPSC Notes

111) திவ்யாவும் அவளது தோழியும் பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்புகையில் மூக்கினை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகளைப் பற்றி பேசிக்கொண்டு சென்றனர். இருவரும் அந்த எழுத்துகள் பயின்று வரும் சொற்களை வைத்து வார்த்தைகளை உருவாக்கினர்.அவ்வார்த்தைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூக்கின் மூலம் பிறக்கும் எழுத்துகள் இல்லாத சொற்களைக் குறிப்பிடுக.

A)  சங்கு, வெண்மை, பம்பரம், இஞ்சி

B)  நதி, மஞ்சள், மகரந்தம், திங்கள்

C)  காய்கறி, வெற்றி, தோல்வி, பள்ளி

D)  மரம், பைந்தமிழ், மேன்மை, கனி

ANSWER KEY: C

112) வல்லொலிகளில் பிறக்கும் எழுத்துகள் பற்றி பேசிக்கொண்டு வந்த நவீனும், மதனும் வல்லொலிகளில் இரட்டித்து வரும் வார்த்தைகளைக் கொண்டு வரிகளை அமைக்குமாறு இருவரும் தங்களுக்குள் போட்டியிட்டனர். அவர்கள் கூறிய வரிகளில் வல்லொலிகள் வராத சொற்களுடைய வரியினைத் தேர்வு செய்க.

A)  அதிக பக்கங்களைக் கொண்டப் புத்தகம்.

B)  பல வண்ணங்களைக் கொண்ட ஓவியம்.

C)  அம்மா கொடுத்த அளவில்லா முத்தம் .

D)  நிறைய அப்பத்திற்கு மட்டும் சக்கரை.

ANSWER KEY: B

113) கிருஷ்ணா என்னும் குழந்தை பழம் என்று உச்சரிப்பதை பலம் என்று உச்சரிக்கின்றான். பழம் என்னும் வார்த்தையை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று சிந்தித்து குழந்தை மாற்றி உச்சரித்த எழுத்து மற்றும் சரியாக உச்சரிக்க வேண்டிய எழுத்து இவைகளின் பிறப்பிடம் எது எனக் குறிப்பிடுக.

A)  கழுத்திலிருந்துப் பிறக்கிறது

B)  மார்பிலிருந்துப் பிறக்கிறது

C)  தலையிலிருந்துப் பிறக்கிறது

D)  மூக்கிலிருந்துப் பிறக்கிறது

ANSWER KEY: A

114) “இஈ எஏ ஐஅங் காப்போடு அண்பல் முதல்நா விளிம்புற வருமே” இப்பாடலினை அறிந்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விளக்கத்தைக் குறிப்பிடுக.

A)  வாயைத்திறந்து மேல்வாய்ப் பற்களை முதல் நாக்கின் விளிம்பில் பொருத்துவதால் பிறக்கும்.

B)  வாயைத்திறந்து மேல் இதழில் பற்களையும் கடை நாக்கின் விளிம்பில் பொருத்துவதால் பிறக்கும்.

C)  வாயைத்திறந்து.நுனி நாவுடன் மேல் அண்ணம் பொருந்துவதால் பிறக்கும்.

D)  வாயைத்திறந்து இடை நாவுடன் இடை வாயினைப் பொருத்துவதால் பிறக்கும்.

ANSWER KEY: A

115) மார்பினை இடமாகக் கொண்டுப் பிறக்கும் எழுத்துகளைப் பற்றி ஆராய்ந்து எந்த எழுத்துக்கள் மார்பிலிருந்த்து பிறக்கிறது என கொடுக்கப்பட்டுள்ள வரிகளிலிருந்து தேர்வு செய்து மார்பினை இடமாகக் கொண்டுப் பிறக்காத எழுத்தினை உடைய வரியினைத் தேர்வு செய்க.

A)  பந்துடன் எறிந்த கைக்குட்டை பக்கத்து வீட்டு பாப்பா மீது பட்டது.

B)  நாங்கள் அனைவரும் நாடகங்களைப் பார்த்து மகிழ்ந்தோம் .

C)  குடையுடன் சென்ற நான் மழையில் நனைந்து விளையாடினேன்.

D)  எங்கள் வீட்டில் உள்ள பொம்மைகள் மிகவும் அழகாக உள்ளன.

ANSWER KEY: A

116) எழுத்துகளின் பிறப்புக் குறித்த கூற்றுகளில் சரியானக் கூற்றுகளைக் குறிப்பிடுக.     

 கூற்று 1:     நிறைந்த உயிரினது முயற்சியால் எழுகின்ற ஒலியானது வெவ்வேறு எழுத்தாகத் தோன்றும்.                                                                                                     

கூற்று 2:     தோன்றுகின்ற எழுத்தின் ஒலிகள் மார்பு, மூக்கு போன்ற இடங்களில் இருந்தே பெரும்பாலும் தோன்றும்.                                                                               

கூற்று 3:      உதடு, நாக்கு, பல், வாய் என்ற நான்கு உறுப்புகளின் முயற்சியால் எழுத்தொலிகள் தோன்றுகிறது.                                                                                                                 

கூற்று 4:     சில இடங்களுக்குப் பொருந்தி, சில உறுப்புகள் முயற்சிப்பதால் எழுத்துகள் தோன்றுகிறது.

A)  கூற்று 1 மாற்றும் 2 சரி

B)  கூற்று 3 மட்டும் 4 சரி

C)  கூற்று 3 மற்றும் 1 சரி

D)  கூற்று 4 மற்றும் 2 சரி

ANSWER KEY: B

117) எழுத்துகள் பிறக்கும் இடத்திற்கு ஏற்ப சில வகைகள் கூறப்படுகின்றன.அவற்றில் இடப்பிறப்பு மற்றும் முயற்சிப் பிறப்பு பற்றிய தகவல்களை பற்றி கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகள் மூலம் அறிந்து அவற்றில் பொருந்தாதவைகளைத் தேர்ந்தெடுக.  

கூற்று 1:      இடப்பிறப்பு என்பது நம் உடலில் உள்ள சில இடங்களுக்கு ஒன்றிப் பிறப்பது.   

கூற்று 2:       நம் உடலின் சிலப்பகுதிகளின் இயல்பு நிலையில் பிறக்கின்ற எழுத்துகள் இடப்பிறப்பு.                                                                                                                                    

கூற்று 3 :     எழுத்துகளை ஒலிக்கச் செய்யும் முயற்சியின் மூலம் பிறப்பது முயற்சிப்பிறப்பு.

கூற்று 4:         நாவினை அசைத்தல் மற்றும் இதழ் குவித்தலால் பிறப்பது முயற்சிப்பிறப்பு.

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER KEY: B

118)  எழுத்துகள் என்பது வழங்கப்படும் முறை மற்றும் ஒலிக்கப்படும் முறைக்கு ஏற்ப அமைந்துள்ளது. அதன் முறைகளை அறிந்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் தவறானதைக் குறிப்பிடுக.

A)  இயல்பான ஓசையை உடையதால் குறில்கள் முன்பும் நீண்ட ஓசையை உடைய நெடில்கள் பின்பும் அமைந்துள்ளது.

B)  மெல்லிய ஓசையுடையதால் மெல்லினம் முன்பும் வல்லினம் மெல்லினத்திற்குப் பின்பும் அமைந்துள்ளது.

C)  வல்லினத்தின் ஓசை மற்றும் மெல்லினத்தின் ஓசை உணர்ந்தபின்பே இடையினத்தின் ஓசையை உணர முடியும்.

D)  இடையினத்தின் ஓசையை இறுதியாக உணர்வதாலே இடையினத்தை இறுதியாக வைத்துள்ளனர்.

ANSWER KEY: B

119) வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கும் எழுத்து _______

A)  உயிரெழுத்து

B)  மெய்யெழுத்து

C)  உயிர்மெய்யெழுத்து

D)  ஆயுத எழுத்து

ANSWER KEY: D

120) மெய்யெழுத்துகளுள் இதழின் துணையின்றிப் பிறக்கும் எழுத்துகள் ______

A)  பதினைந்து

B)  பதினெட்டு

C)  பன்னிரெண்டு

D)  பதினாறு

ANSWER KEY: A

8th Tamil TNPSC Notes

121) நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்

A)  ச்,ஞ்

B)  க், ங்

C)  த்,ந்

D)  ப், ம்

ANSWER KEY: B

122) தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே தோன்றும் எழுத்துகள் __________

A)  உயிர் எழுத்துகள்

B)  மெய்யெழுத்துகள்

C)  சார்பு எழுத்துகள்

D)  இன எழுத்துகள்

ANSWER KEY: C

123) மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ____

A)  ன்

B)  ண்

C)  ட்

D)  ம்

ANSWER KEY: A

124) மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் தனி மெய்யெழுத்து உள்ள சொல்லைத் தேர்க.

A)  சிறப்பு

B)  கடவுள்

C)  தமிழ்

D)  மகிமை

ANSWER KEY: C

125) சார்பெழுத்து இடம்பெறாத சொல்லைத் தேர்க.

A)  ஆல்

B)  வளையல்

C)  எஃகு

D)  காப்பு

ANSWER KEY: A

126)  க், ட், வ், ய், ழ், ள் – குழுவில் பொருந்தாத எழுத்து எது?

A)  வ்

B)  க்

C)  ட்

D)  ழ்

ANSWER KEY: A

127) இதழொலிகள் என்று அழைக்கப்படுவன ______

A)  ககர ஙகரம்

B)  பகர மகரம்

C)  சசர ஞகரம்

D)  டகர ணகரம்

ANSWER KEY: B

128) பல்இதழ் இயைய வகரம் பிறக்கும்’- தொல்காப்பியம் இதில் ‘பல்இதழ்’ என்னும் சொல்லின் பொருள் _______

A)  ஒன்றுக்கும் மேற்பட்ட இதழ்

B)  பல நிறத்தை உடைய இதழ்

C)  பற்கள் மற்றும் இதழ்

D)  பல வடிவத்தை உடைய இதழ்

ANSWER KEY: C

129) மொழியியல் அறிஞர்கள் பகரமகரத்தை ______ என்பர்.

A)  அண்பல்லொலி

B)  ஈரிதழ் ஒலி

C)  ஓரிதழ் ஒலி

D)  பல்லிதழ் ஒலி

ANSWER KEY: B

130) கூறாநின்றான்’ என்பதன் சரியான பகுபதப் பிரிப்பு ______

A)  கூறு + ஆ +  நில்(ன்) + ற் + ஆன்

B)  கூறா +  நின் + ற் + ஆன்

C)  கூறா +  நில்(ன்) +  ற் + ஆன்

D)  கூறு + ஆநின்று + ஆன்

ANSWER KEY: D

8th Tamil TNPSC Notes

131) அண்பல் அடிநா முடியுறத் தந வரும்”- இதில் அண்பல் என்று குறிப்பிடப்படும் உறுப்பு _______

A)  மேல்வாய்ப் பல்லின் நுனிப் பகுதி

B)  மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதி

C)  மேல்வாய்ப் பல்லின் நடுப்பகுதி

D)  மேல்வாய்ப் பல்லின் முன் பகுதி

ANSWER KEY: B

132) பக்கம்’ – என்னும் சொல்லை உச்சரிக்கப் பயன்படுத்த வேண்டிய உறுப்புகள் _______

A)  மேல் கீழ் உதடுகள் மற்றும் நா, அண்ணத்தின் முதல்பகுதி

B)  மேல் கீழ் உதடுகள், மற்றும் நா, அண்ணத்தின் இடைப் பகுதி

C)  மேல் கீழ் உதடுகள் மற்றும் நா, அண்ணத்தின் நுனிப் பகுதி

D)  மேல் கீழ் உதடுகள் மற்றும் நாக்கின் ஓரங்கள்

ANSWER KEY: A

133)  கண்ணன் கோவலுக்குச் செல்லும் வழியில் மரக்கிளைகளிகளில் அமர்ந்திருந்த குரங்குகளைக் கண்டு பயந்துவிட்டான். அதனால் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்டான்.” இத்தொடரில் இடம்பெற்றுள்ள சொற்களை   

1.    கண்ணன், கோவிலுக்கு, மரக்கிளையில்  

2.    கோவிலுக்கு, சென்று, ஒளிந்து,   

3.    ஓடி, வீட்டிற்குள், குரங்குகள்                                                     

4.    கண்டு, இருந்த அருகில்,       என்று குழுப்படுத்தினால், அதில் சரியான குழு எது?

A)  கண்டு, இருந்த அருகில்,

B)  ஓடி, வீட்டிற்குள், குரங்குகள்

C)  கோவிலுக்கு, சென்று, ஒளிந்து,

D)  கண்ணன், கோவிலுக்கு, மரக்கிளையில்

ANSWER KEY: C

134) கீழ்க்காணும் தொடர்களுள் எது மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதற்கும், மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதற்குமான பயிற்சித் தொடர்?

A)  ஓடுற நரியில ஒரு நரி கிழ நரிதான்

B)  யார் தச்ச சட்டை தாத்தா தச்ச சட்ட

C)  நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட

D)  மெய்த்தும் பொய்க்கும், பொய்த்தும் மெய்க்கும்

ANSWER KEY: B

135) சொல்வதை எழுதுதல் பயிற்சியில் ஆசிரியர் , பழம், கண்கள், வெள்ளம்,முதலான சொற்களைச் சரியான உச்சரிப்பில் கூறினார். அதில் ஒரு மாணவன் பளம், கன்கல், வெல்லம் என்று எழுதியிருந்தான். ஏனென்றால், அவனுக்கு

A)  சொல்வதைக் கேட்டு எழுதத் தெரியாது.

B)  எழுத்துகள் பிறக்குமிடங்கள் சரியாகத் தெரியாது.

C)  ஆசிரியர் கூறியதைக் கேட்கவில்லை.

D)  மயங்கொலிகள் தமிழ் மொழியில் இல்லை.

ANSWER KEY: B

136) வாழைப்பழம் அழுகி நழுவிக் கீழே விழுந்தது” இந்நாபிறழ் பயிற்சி வாக்கியம் , சரியான உச்சரிப்புக்கு ஒத்துழைக்கக்கூடிய வாயின் எந்த முயற்சிக்குப் பயிற்சியாக அளிக்கப்படுகிறது?

A)  மேல்வாயை, நாவின் நுனி வருட

B)  மேல்வாயின் அடிப்பகுதியை, நாக்கின் அடிப்பகுதி பொருந்த

C)  மேல்வாயை, நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவ

D)  மேல் வாயை நீக்கின் நுனி மிகவும் பொருந்த

ANSWER KEY: A

137)  மேனாட்டு மொழியாராய்ச்சி அறிஞர்கள், பேச்சு ஒலிகளைப் பற்றிய மொழியியல் ஆய்வுகளை எல்லாம் 19 ம் நூற்றாண்டிலும் 20 ம் நூற்றாண்டிலும் மிகவும் முனைந்து ஈடுபட்டனர். இந்த ஆய்வு, பேச்சு ஒலிகள் தோன்றுவதற்கு எந்த உடல் உறுப்பின் முயற்சியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன என்று ஆராய்ந்தது. இவ்வறிஞர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் மற்றும் அதற்குப் பின் எழுதப்பட்ட நன்னூல் கருத்துகளோடு ஒத்திருப்பதைக் காண முடிகிறது. ” – இதனால் பெறப்படும் கருத்து _______

A)  உலக மொழிகள் அனைத்தும் தமிழ்மொழியைப் போலவே ஒலியமைப்பைக் கொண்டுள்ளன.

B)  மொழி அறிஞர்கள் தொல்காப்பியதைக் கற்று அறிந்திருந்தனர்.

C)  தமிழ் மொழி இலக்கணம், அறிவியல் முறைப்படி அமைந்துள்ளது.

D)  தமிழ் இலக்கணம் உலக மக்கள் அனைவராலும் பேசப்படும் மொழியாகும்.

ANSWER KEY: C

138) எழுத்துகளின் பிறப்பிடத்தை அறிந்து கொள்ள வேண்டியதன் காரணம் ___ 

1.    பிறப்பிடத்தை அறிந்துகொண்டு எழுத்துகளைச் சரியாக உச்சரிக்க வேண்டும்.     

2.    கேட்பவர்கள் சரியாகக் கேட்டால்தான் ஒலி வேறுபாட்டைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.                                                                                                                                                 

3.     சொல்ல நினைக்கும் கருத்துகளைத் தவறின்றிப் பேசவும் கேட்கவும் முடியும்.     

4.     பிறப்பில் உள்ள எழுத்துகளின் ஏற்றத்தாழ்வினை அப்பொழுதுதான் சரியாக அறிந்துக் கொள்ள முடியும்.                                                                                                                   – காரணங்களின் பொருத்தப்பாட்டினைத் தேர்க

A)  காரணம் 1, 2, 4 சரி 3 மட்டும் தவறு

B)  காரணம் 1, 3, 4 சரி 2 மட்டும் தவறு

C)  காரணம் 1, 2, 3 சரி, 4 மட்டும் தவறு

D)  காரணம் 2, 3, 4 சரி 1 மட்டும் தவறு

ANSWER KEY: C

139) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.” இக்குறட்பாவில் வள்ளுவர் ஒத்த ஒலியுடைய சொல்லை அடுக்கி வைத்துக் கூறியிருப்பதன் காரணங்கள்                                                                                                                        

1.     உணவின் இன்றியமையாமையை வலியுறுத்த                                                                         

2.     மழையே உணவிற்கு அடிப்படை என்றுணர்த்த

3.     ஒத்த ஒலியுடைய சொற்களின்றி பிற சொற்கள் வாரா                                                                

4.      ஒத்த ஒலியுடைய சொற்கள் பொருளாழத்தை மேம்படுத்தும் பொருந்தாத காரணத்தைத் தேர்க

A)  1, 2, 4 சரி 3 தவறு

B)  1, 2, 3  சரி 4 தவறு

C)  1, 3, 4 சரி 2 தவறு

D)  2, 3, 4 சரி 1 தவறு

ANSWER KEY: A

140) ஒலிக்கும் முயற்சியில் இதழ்களின் துணை தேவைப்படாத சீர்களால் அமைந்த குறள் கீழ்க்காண்பவற்றுள் எது?

A)  கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக

B)  யாதானின் நாதானின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்

C)  அகர முதல எழுத்தொல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

D)  செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை

ANSWER KEY: B

8th Tamil TNPSC Notes

141) கற்றலின் கேட்டலே நன்று’ என்று கூறுவதன் காரணம்                                                              

1.     கல்வி, முதலில் காதால் கேட்டு மனதால் உள்வாங்கிக் கொள்ளும் செவிப்புலன் வழியேதான் முதலில் தொடங்குகிறது.                                                                            

2.     கேட்பதற்கு செவி மட்டும் போதும் வேறு உபகரணம் தேவையில்லை; ஆனால் கற்பதற்குப் புற உபகரணம் தேவைப்படுகிறது.                                                                

3.     கேட்பதும் கேட்டதைப் பிழையின்றிப் பேசுவதும் கற்றலின் முதல்படியாகும்.  

4.     சரியான உச்சரிப்பைக் கேட்டுப் பிழையின்றிப் பேசினால்தான் எழுத்துமொழி எளிதாகும். பொருந்தாத கருத்தைத் தேர்க

A)  1, 2, 3 சரி 4 தவறு

B)  2, 3, 4 சரி 1 தவறு

C)  1, 3, 4 சரி 2 தவறு

D)  1, 2 4 சரி 3 தவறு

ANSWER KEY: C

142) தமிழில் “சொல்” என்ற சொல்லின் பொருள் எதனைக் குறிப்பிடுகிறது?

A)  கல்

B)  நெல்

C)  பல்

D)  வார்த்தை

ANSWER KEY: B

143) ஒரே ஒரு எழுத்தின் மூலம் பொருள்தரும் சொல்லானது _____ ஆகும் .

A)  ஈரெழுத்து ஒருமொழி

B)  ஓரெழுத்து ஒருமொழி

C)  ஒற்றெழுத்து

D)  உயிரெழுத்து

ANSWER KEY: B

144) செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A)  பாவாணர்

B)  ஜெயகாந்தன்

C)  இரா. இளங்குமரனார்

D)  திருவள்ளுவர்

ANSWER KEY: C

145) இரா. இளங்குமரனார் ஆற்றிய பணிகளில் அடங்காதவையைக் கண்டறிக.

A)  இதழாசிரியர்

B)  உரையாசிரியர்

C)  நூலாசிரியர்

D)  பேராசிரியர்

ANSWER KEY: D

146) இரா. இளங்குமரனார் தொகுத்த நூல் எதுவென கீழ்க்காணும் பட்டியலிலிருந்துத் தேர்வு செய்க .

A)  குண்டலகேசி

B)  தேவநேயம்

C)  காக்கைபாடினியம்

D)  தமிழிசை இயக்கம்

ANSWER KEY: B

147) ஓரெழுத்து ஒருமொழி இடம்பெறாத எழுத்துகளின் வகையினைத் தேர்வு செய்க

A)  உயிரெழுத்து

B)  மெய்யெழுத்து

C)  சார்பெழுத்து

D)  உயிர்மெய் எழுத்து

ANSWER KEY: B

148) ஓரெழுத்து ஒருமொழி சொற்களில் பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க .

A)  மீ

B)  வை

C)  தீ

D)  ரோ

ANSWER KEY: D

149) இரு ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் இணைந்து புதுச் சொற்கள் உருவாகின்றன. அவற்றுள் காட்டுப்பசுவைக் குறித்து வரும் ஓரெழுத்து ஒருமொழி இணைச் சொல்லைத் தேர்ந்தெடு .

A)  ஆமா

B)  பூவா

C)  நீசே

D)  ஏசா

ANSWER KEY: A

150) மகர வரிசையில் இடம்பெறும் ஓரெழுத்து ஒருமொழியில் குதிரையைப் பொருளாக உடைய மகர எழுத்தினைக் கண்டறிக .

A)  ம

B)  மா

C)  மீ

D)  மே

ANSWER KEY: B

8th Tamil TNPSC Notes

151) ஓரெழுத்து ஒருமொழி சொல்லான “மூ” என்பதற்கு அர்த்தம் என்ன என்பதைக் கீழ்க்காணும் பட்டியலிலிருந்து தேர்வு செய்க.

A)  மூப்பு

B)  மூக்கு

C)  மூன்று

D)  மூட்டு

ANSWER KEY: C

152) பொதுவாக ஓரெழுத்து ஒருமொழியில் இடம்பெறும் சொற்கள் நெடில் ஓசையை உடையனவே . மிக குறைவான எண்ணிக்கையிலே குறில் ஓசையை உடைய ஓரெழுத்து ஒருமொழிச்சொற்கள் உள்ளன . அவற்றுள் கீழ்க்காணும் ஓரெழுத்து ஒருமொழி சொற்களில் குறில் ஓசையை உடைய ஓரெழுத்து ஒருமொழிச் சொல்லைக் கண்டறிக .

A)  ப

B)  ய

C)  செ

D)  வ

ANSWER KEY: A

153) ஒரு சொல்லின் வளர்ச்சிக்கு அதன் இலக்கியம் மிகப்பெரிய காரணமாக அமைகிறது. அவ்வகையில் ஒரு சொல்லின் தேய்தலுக்கு காரணமாக அமைவது எதுவெனக் கண்டறிக.

A)  சொல் உருவாகிய இடம்

B)  சொல் தோன்றிய காலம்

C)  சொல்லின் பயன்பாடு

D)  சொல்லின் பெருமை

ANSWER KEY: B

154) நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி என்றார் தொல்காப்பியர். இதில் குறிப்பிடப்படும் நெட்டெழுத்து என்பது யாது ?

A)  ஒரு மாத்திரையை உடைய சொல்லலாகும்

B)  இரு மாத்திரையை உடைய சொல்லாகும்

C)  மூன்று மாத்திரையை உடைய சொல்லாகும்

D)  ஒன்றை மாத்திரையை உடைய சொல்லாகும்

ANSWER KEY: B

155) பொதுவாக வினா சொற்களை உள்ளடக்கிய ஓரெழுத்து சொல் “யா” ஆகும் . அவ்வகையில் மூன்று பேர்களை உள்ளடக்கி கேள்வி வருமாயின் , யா எனும் ஓரெழுத்தை முதன்மையாக கொண்ட சொல் எதுவென ஆராய்ந்து கண்டறிக .

A)  யாவன்

B)  யாவர்

C)  யாவை

D)  யார்

ANSWER KEY: B

156) ஒரு மாணவன் தனது விடுமுறையை தாத்தா பாட்டியிடம் கழிக்க ஊருக்கு செல்கிறான். அப்போது அவனின் தாத்தா அவரது தோட்டத்தை சுற்றிக் காட்டுவதற்கு அவனை அழைத்து செல்கிறார் . அத்தோட்டத்தில் பலவகையான பழங்களின் மரங்கள் இருப்பதைக் கண்டு ரசித்தான் . அப்போது அவனின் தாத்தா பழங்களைப் பறித்துக் கொடுக்கையில் அவற்றை ருசித்து உண்டான். மாம்பழம், கொய்யா, சப்போட்டா, திராட்சை முதலிய பழங்கள் மிகவும் சுவையுடன் இருந்ததாகவும் கூறினான். – மேற்கண்ட பத்தியில் அவன் ருசித்து சாப்பிட்ட பழங்கள் உருவாக காரணமாய் இருந்த மரங்களில் ஓரெழுத்து ஒருமொழியைக் கொண்டுள்ள மரத்தின் பெயரினைச் சுட்டி காட்டுக .

A)  மாமரம்

B)  கொய்யாமரம்

C)  சப்போட்டா மரம்

D)  திராட்சைக் கொடி

ANSWER KEY: A

157) ஒரு அரசன் தன் நாட்டைக் கைப்பற்ற கருதிய பிற நாட்டு அரசனிடம் போரிட்டு தன் நாட்டை மீட்டெடுத்தான் . – இங்கு “கோ” எனும் ஓரெழுத்து ஒருமொழியை விளக்குகின்ற சொல்லாக அமைவது எதுவென ஆராய்க .

A)  நாடு

B)  அரசன்

C)  போர்

D)  கைப்பற்றுவது

ANSWER KEY: B

158) பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைவரையும் புத்தாடை அணிந்து வருமாறு அப்பள்ளியின் முதல்வர் கூறுகிறார். மாணவர் அனைவரும் கண்ணைக் கவரும் வகையில் வண்ண உடைகளை அணிந்து பள்ளியை மேலும் அழகுபடுத்தினர். கபிலன் நீல நிற சட்டையும், முகிலனின் சிகப்பு நிற சட்டையும் அனைவரையும் ஈர்த்தது. ஆசிரியர் முகிலனை அழைத்து ஒரே எழுத்தில் அவனின் சட்டை நிறத்தைக் கூறினார். பின்பு அனைவரிடத்தும் அதற்குரிய அர்த்தத்தை அவரே பரிந்துரைத்தார். இங்கு முகிலனின் சட்டை நிறத்தைக் குறிக்கிற ஓரெழுத்து ஒருமொழி சொல்லாக அமைவது _________ .

A)  கூ

B)  மை

C)  சே

D)  பே

ANSWER KEY: C

159) இரு வேறுபட்ட ஓரெழுத்து ஒருமொழிச் சொற்கள் இணைந்துப் புதிதாக சொல் உருவாகும்போது வேறொரு பொருளைக் குறிக்கும் சொல்லாக அச்சொல் அமைகிறது. அதேபோன்று பூமியைக் குறிக்கிற சொல்லான கூ என்ற ஓரெழுத்து ஒருமொழிச் சொல்லும், ஒழுக்கத்தைக் குறிக்கிற சொல்லான கை என்ற ஓரெழுத்து ஒருமொழிச் சொல்லும் இணைந்து உருவாகும் சொல்லானது எதனைக் குறிக்கும் சொல்லாக அமைகிறது ?

A)  குயில்

B)  ஆந்தை

C)  கழுகு

D)  காகம்

ANSWER KEY: B

160) பிரியா எனும் இளம்பெண் அவள் உறவினர் வீட்டிற்கு விருந்துண்ண வந்திருக்கிறாள். மிகவும் சுவையான உணவினை அவர்கள் பிரியாவிற்கு பரிமாறினர். அதில் அவளுக்கு மிகவும் பிடித்தமான வீ ஆகிய கோழியின் ஊ வை ருசித்து உண்டாள். – இத்தொடரில் ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் கருதி அவற்றின் சரியான தொடரைத் தேர்வு செய்க .

A)  பிரியா,பறவையாகிய கோழியின் முட்டையை ருசித்து உண்டாள்

B)  பிரியா, நாட்டுக் கோழியின் இறைச்சியை ருசித்து உண்டாள்

C)  பிரியா , பறவையாகிய கோழியின் இறைச்சியை ருசித்து உண்டாள்

D)  பிரியா , கருவாகிய கோழியின் முட்டையை ருசித்து உண்டாள்

ANSWER KEY: C

8th Tamil TNPSC Notes

161) கீழ்க்காணும் தொடர்களில் ஓரெழுத்து ஒருமொழி இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்து,பொருள் தராதவாறு மாற்றிப் பொருத்தப்பட்ட ஓரெழுத்து ஒருமொழி பயின்று வந்துள்ள தொடரைத் தேர்வு செய்க.                                                 

கூற்று 1 :       தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டின் கூரை சரிந்து விழுந்தது .       

கூற்று 2 :  தினமும் நன்கு உலர்த்தப்பட்ட தே ஆடைகளை அணிதல் வேண்டும்                                                                                                                                                                   

கூற்று 3 :     பயணத்தை மேற்கொள்ளும்போது இசையுடன் கூடிய பா மகிழ்ச்சி தரும்.                                                                                                                                                                               கூற்று 4 :        காய்ச்சலைக் கண்டறிய மருத்துவர் கா – வை பரிசோதனை செய்வார் .

A)  கூற்று 1 மற்றும் 2

B)  கூற்று 2 மற்றும் 4

C)  கூற்று 3 மற்றும் 4

D)  கூற்று 4 மற்றும் 1

ANSWER KEY: B

162) பகர வரிசையில் அமைந்துள்ள ஓரெழுத்து ஒருமொழியான பூ , பே , பை , பி ஆகியவற்றின் பொருளை உணர்த்தும் சொற்களைப் பயன்படுத்தி தொடர்கள் அமைக்கப்பட்டுள்ளன அவற்றுள் பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க .

A)  பூ – தோட்டத்தில் ரோஜா பூ பூத்துக் குலுங்கின.

B)  பே – வானத்தில் நட்சத்திரங்களின் வெளிச்சம் கண்ணைக் கவர்ந்தது.

C)  பை – நாகம் படம் எடுத்ததை அனைவரும் வியந்துப் பார்த்தனர்.

D)  பி – மஞ்சள் தேய்த்துக் குளித்து வர முகம் அழகு பெரும்.

ANSWER KEY: B

163) ஓரெழுத்து ஒருமொழியில் ஒரே சொல்லானது பல பொருளைத் தரும் . அவ்வகையில், தா எனும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக் குறித்து வரும் தொடர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தவறான பொருளைத் தரக்கூடிய தொடரைத் தேர்வு செய்க .                                                                      

கூற்று 1 :      ஒரே வகுப்பில் பயின்று வரும் மாணவர்கள், அனைவரிடத்தும் பகை இல்லாமல் நட்பை மேற்கொள்ள வேண்டும் .                                                                   

கூற்று 2 :      ஒருவரிடம் உள்ள குற்றத்தைக் கண்டு அவரிடம் அக்குற்றத்தை எடுத்துரைப்பது நல்ல பண்பில் அடங்கும் .                                                                                           

கூற்று 3 :      ஒரு மாணவி ஓட்டப்பந்தயத்தில் வெற்றிக் கோட்டினை தாண்டியும் அவளது ஓட்டம் அடங்கவில்லை .                                                                              

கூற்று 4 :       வாழ்க்கையில் தன்னம்பிக்கையையும் உறுதியையும் மேற்கொண்டால் வாழ்வில் வெற்றியைக் காணலாம் .

A)  கூற்று 1 பொருந்தவில்லை

B)  கூற்று 2 பொருந்தவில்லை

C)  கூற்று 3 பொருந்தவில்லை

D)  கூற்று 4 பொருந்தவில்லை

ANSWER KEY: D

164) ஒரு ஓரெழுத்து சொல்லானது பல பொருட்களைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. அவ்வாறு பெறப்பட்ட சொல்லின் பொருள்களைக் கொண்டு தொடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் “தீ” என்ற ஒரெழுத்தின் பொருள்கள் உள்ளடக்கிய தொடர்கள் உள்ளன. அவற்றுள் பொருந்தாத ஒன்றினைத் தேர்வு செய்க .

A)  செம்புக் கலனில் நீரைக் குடிப்பதால் உடல் சூடு தணியும்

B)  பெண்களுக்கெதிரான கொடுமைகளை சற்றே எதிர்ப்பது நன்று.

C)  நோய்கள் இல்லாத மனிதனின் வாழ்வு மேன்மைக்குரியது.

D)  ஒருவரின் தவறான செயல்கள் பிறரை கோபமுறச் செய்யும்.

ANSWER KEY: C

165)  இரு வேறுபட்ட ஓரெழுத்து ஒருமொழி சொற்கள் ஒரே பொருளை உணர்த்தும் வகையில் அமையும். அவ்வகையில் இரு சொற்கள் ஒன்றே அமைந்து ஒரே பொருளைத் தருவதாக கீழ்க்காணும் தொடர்கள் அமைந்துள்ளன. அவற்றுள் தவறான ஒன்றினைத் தேர்வு செய்க .                 

கூற்று 1 :     இ என்ற சொல்லும் மே என்ற சொல்லும் அன்பு எனும் உணர்வைக் குறிக்கும் சொல்லாக உள்ளன.                                                                                                                

கூற்று 2 :      பை என்ற சொல்லும் பா என்ற சொல்லும் அழகு எனும் பொருளைக் குறிக்கும் சொல்லாக உள்ளன.                                                                              

கூற்று 3 :      கு என்ற சொல்லும் மை என்ற சொல்லும் குற்றம் என்ற தவற்றைக் குறிக்கும் சொல்லாக உள்ளன.                                                                                   

கூற்று 4 :      ம என்ற சொல்லும் வி என்ற சொல்லும் பிரம்மன் என்ற தெய்வத்தைக் குறிக்கும் சொல்லாக உள்ளன.

A)  கூற்று 1 தவறு

B)  கூற்று 2 தவறு

C)  கூற்று 3 தவறு

D)  கூற்று 4 தவறு

ANSWER KEY: D

TNPSC POTHU TAMIL

Join our Telegram channel to practice maths questions

https://t.me/tnpscmathsgroup

Google reviews…
Karkandu Kanitham

https://maps.app.goo.gl/nty8K6MY5S4hUzw16

Facebook Page..

https://www.facebook.com/karkandukanitham

You tube link – Subscribe and share

https://www.youtube.com/c/karkandukanitham

Leave a Comment