TNPSC Group 4 Tamil Question Paper with Answers:
பகுதி-௮ (தமிழ் தகுதி தேர்வு)
வினாக்கள் :1-100 மொத்த மதிப்பெண்கள் : 150
1) இரு வினைகளின் பொருள் வேறுபாடு
இரத்தல் – இறத்தல்
(A) கற்பித்தல் – வழங்கல்
(B) மரணம் – கொடுத்தல்
(C) கையேந்துதல் – மரணம்
(D) மரணம் – கையேந்துதல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
2) பொருள் வேறுபாடு அறிக
இரங்கு – இறங்கு
(A) கருணை காட்டு – கீழே வா
(B) கருணை – மேலே போ
(C) கருணை செய் – தூரப் போ
(D) கருணை காட்டு – இங்கு வா
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
3) சொற்களை ஒழுங்குபடுத்துக
(A) வறியவருக்கு என்பது இல்வாழ்வு உதவி செய்தல்
(B) உதவி செய்தல் என்பது இல்வாழ்வு வறியவருக்கு
(C) உதவி வறியவருக்கு என்பது செய்தல் இல்வாழ்வு
(D) இல்வாழ்வு என்பது வறியவருக்கு உதவி செய்தல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
4) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு
(A) மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே
(B) மொழியின் பேச்சுமொழியே உயிர்நாடியாக விளங்குவது
(C) உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியின் மொழி
(D) மொழி விளங்குவது பேச்சுமொழியே உயிர்நாடியாக
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
5) சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
சொற்களை ஒழுங்குபடுத்துக
(A) உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்
(B) உலகம் உள்ளவரையிலும் தமிழ்மொழி வாழட்டும்
(C) உலகம் வாழட்டும் தமிழ்மொழி உள்ளவரையிலும்
(D) உலகம் வாழட்டும் உள்ளவரையிலும் தமிழ்மொழி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
6) அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்தல்.
ஒழுக்கம்; உயிர்; ஆடு; எளிமை; அன்பு; இரக்கம்; ஓசை; ஐந்து; ஈதல்; ஊக்கம்; ஏது; ஒளவை
(A) ஆடு; ஈதல்; ஒழுக்கம்; உயிர்; எளிமை; ஐந்து; ஓசை; அன்பு; ஒளவை; இரக்கம்; ஏது; ஊக்கம்
(B) இரக்கம்; ஒழுக்கம்; எளிமை; ஓசை; அன்பு; ஆடு; ஒளவை; உயிர்; ஈதல்; ஐந்து; ஏது; ஊக்கம்
(C) அன்பு; ஆடு; இரக்கம்; ஈதல்; உயிர்; ஊக்கம்; எளிமை; ஏது; ஐந்து; ஒழுக்கம்; ஓசை; ஒளவை
(D) ஈதல்; இரக்கம்; உயிர்; ஐந்து; ஒழுக்கம்; ஓசை; ஏது; எளிமை; ஊக்கம்; ஒளவை; ஆடு; அன்பு
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: C
7) அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.
தேசியம், துறைமுகம், நகரம், நெடுஞ்சாலை, மாவட்டம்.
(A) நகரம், மாவட்டம், துறைமுகம், நெடுஞ்சாலை, தேசியம்
(B) துறைமுகம், தேசியம், நகரம், நெடுஞ்சாலை, மாவட்டம்
(C) துறைமுகம், தேசியம், மாவட்டம், நெடுஞ்சாலை, நகரம்.
(D) நகரம், மாவட்டம், நெடுஞ்சாலை, துறைமுகம், தேசியம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
8) அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க.
(A) புதுமை, பாரதம், பெண்கள், பொதுக்கூட்டம்
(B) பாரதம், புதுமை, பெண்கள், பொதுக்கூட்டம்.
(C) பொதுக்கூட்டம், பெண்கள், புதுமை, பாரதம்
(D) பாரதம், பெண்கள், பொதுக்கூட்டம், புதுமை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
(9) “மகிழ்” எனும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க
(A) மகிழ்ச்சி
(B) மகிழ்தல்
(C) மகிழ்ந்தோர்
(D) மகிழ்ந்தார்
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: C
10) பின்வரும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் யாது?
உண்.
(A) உண்ண
(B) உண்ணுதல்
(C) உண்கின்றவன்
(D) உண்ட
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
11) பொறித்த — வேர்ச்சொல்லை எழுதுக
(A) பொறித்த
(B) பொறி
(C) பொறிக்கப்பட்ட
(D) பொறிக்கப்பட்டு
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: B
12) வேர்ச்சொல்லின் தொழிற் பெயரை எழுதுக
நட
(A) நடத்தல்
(B) நடக்கின்றது
(C) நடவு
(D) நடவாமை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
13) வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சோல்லை எழுதுக
தருகின்றனர்
(A) தந்து
(B) தா
(C) தரு
(D) தாது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
14) வேர்ச் சொல்லைத் தேர்வு செய்தல் :
“பாடுகிறாள்” என்னும் சொல்லின் வேர்ச் சொல் காண்க.
(A) பா
(B) பாடு
(C) பாட்டு
(D) பாடி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
15) ஒரு பொருள் தரும் பல சொற்கள்
அரும்பு, போது, மலர், வீ, செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?
(A) இலை வகை
(B) பூவின் நிலை
(C) கொழுந்து வகை
(D) கிளைப் பிரிவு
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: B
16) ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
கொட்டை, முதிரை, காழ், தேங்காய்
(A) மணிவகை
(B) பிஞ்சுவகை
(C) குலை வகை
(D) பழத்தோல் வகை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
17) ஒலி மற்றும் பொருள் வேறுபாடு
இராமன் ______________ எய்தான்.
(A) கணை
(B) கனை
(C) கநை
(D) களை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
18) கூரை, கூறை – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
(A) வீட்டின் கூரை, கால்சட்டை
(B) புடவை, வீட்டின் அடிப்பகுதி
(C) கால்சட்டை, வீட்டின் கூரை
(D) வீட்டின் கூரை, புடவை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
19) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்.
SALINE SOIL – தமிழ்ச்சொல் அறிக
(A) களர் நிலம்
(B) பாலை நிலம்
(C) உவர் நிலம்
(D) சதுப்பு நிலம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
20) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Guide lines
(A) பின்பற்றத்தக்க வழிமுறைகள்
(B) வழிகாட்டு ஏடு
(C) கையேடு
(D) வழிகாட்டி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
21) ஆங்கிலச் சொல்லுக்கு நேரான – தமிழ்ச் சொல்லை அறிதல்
சரியான இணையைத் தேர்க.
(A) டிஜிட்டல் – மின்னனு வணிகம்
(B) டெபிட்கார்டு – இணையதள வணிகம்
(C) கிரெடிட் கார்டு – கடன் அட்டை
(D) ஆன்லைன் ஷாப்பிங் – பற்று அட்டை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
22) தொடரில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
(A) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நள்ளது.
(B) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.
(C) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்லது.
(D) வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: B
23) மரபுப் பிழையுள்ள தொடரைக் கண்டறிக.
(A) பூப் பறி
(B) சோறு உண்
(C) சுவர் எழுப்பு
(D) பானை வனை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
24) பிழை திருத்தம் – மரபுப் பிழைகள், இளமைப் பெயரைத் தேர்க.
சிங்கம்.
(A) குட்டி
(B) பறழ்
(C) குருளை
(D) கன்று
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
25) குற்றியலுகர வகையறிந்து பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) நெஞ்சு
(B) இரும்பு
(C) அமிழ்து
(D) வண்டு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
26) பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.
சினைப்பெயருக்குப் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
(A) கண்
(B) கிளை
(C) சிவப்பு
(D) வால்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
27) “அணுகு” என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக.
(A) தெளிவு
(B) சோர்வு
(C) பொய்மை
(D) விலகு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
28) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
“எல்” – என்பதன் எதிர்ச்சொல்
(A) பகல்
(B) நண்பகல்
(C) இரவு
(D) மாலை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: C
29) எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்.
உதித்த
(A) நிறைந்த
(B) மறைந்த
(C) குறைந்த
(D) தோன்றிய
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
30) “கலனல்லால்” – என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) கலம் + அல்லால்
(B) கலன் + லல்லால்
(C) கலன் + அல்லால்
(D) கலன் + னல்லால்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: C
31) ”வானமளந்தது” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ___________
(A) வான + மளந்தது
(B) வான் + அளந்தது
(C) வானம் + அளந்தது
(D) வான் + மளந்தது
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: C
32) சரியான விடையைத் தேர்க.
(A) கண் + அழகு = கண்ணழகு
(B) கண்+ காட்சி = கண்ணாட்சி
(C) கண் + பார்வை = கற்பார்வை
(D) கண் + இமை = கண்ணமை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
பத்தியிலிருந்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு (33 – 37).
இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர் கரிகாலன் கட்டிய கல்லணையைப் பல ஆண்டுகள் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டது. தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளம் குன்றியது. இந்தச் சூழலில் காவிரி பாசனப் பகுதிக்குத் தனிப் பொறுப்பாளராக சர் ஆர்தன் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர் பயனற்று இருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் அடித்தளத்தை ஆராய்ந்து பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்தியம்பினார். கல்லணைக்கு கிராண்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார். மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டுதான் 1873 ஆம் ஆண்டு கோதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
33) தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை இழந்த மாவட்டம் எது?
(A) திருச்சி
(B) தஞ்சாவூர்
(C) நாகப்பட்டிணம்
(D) மதுரை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
34) ஆங்கிலேய அரசு சர் ஆர்தர் காட்டனை எப்பணியில் நியமித்தது ?
(A) பொறியாளர்
(B) கட்டிடப் பொறுப்பாளர்
(C) தனிப்பொறுப்பாளர்
(D) ஆளுநர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
35) கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை எது?
(A) கல்லணை
(B) கிராண்ட் அணைகட்
(C) தெளலீஸ்வரம் அணை
(D) பக்ராநங்கல் அணை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
36) இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
(A) சர் ஆர்தர் காட்டன்
(B) கரிகாலன்
(C) இராசராசன்
(D) ஜான் பென்னி குவிக்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
37) பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் மக்களுக்கு எடுத்துக்கூறியவர் யார்?
(A) ஜான் பென்னிகுவிக்
(B) பழந்தமிழர்
(C) பொறியாளர்கள்
(D) சர் ஆர்தர் காட்டன்
(E) விடைதெரியலில்லை
ANSWER KEY: D
38) ஒருமை – பன்மை பிழை நீக்குக.
இவை ____________ எனக்குப் பிடித்த நூல்கள் வாங்கினேன்.
(A) தான்
(B) தாம்
(C) தனது
(D) தமது
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
39) ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
(A) மூவேந்தர்கள் குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.
(B) தொண்டி, முசிறி, காந்தளூர் என்பன சேர நாட்டின் துறைமுகப் பட்டினங்களாக விளங்கியது
(C) சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டன.
(D) தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும், சேர, சோழ பாண்டியர்களுக்கு உரியதாகக் கூறுகின்றது.
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
40) சொல் – பொருள் – பொருத்துக.
(a) நமன் (1) ஈடேறுங்கள்
(b) நம்பர் (2) எமன்
(c) நாணாமே (3) அடியார்
(d) உய்ம்மின் (4) கூசாமல்
(a) (b) (c) (d)
(A) 2 3 4 1
(B) 4 3 2 1
(C) 2 1 3 4
(D) 4 2 1 3
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
41) சொல் – பொருள் – பொருத்துக.
(a) சமர் (1) வயல்
(b) கழனி (2) கடல்
(c) கலம் (3) போர்
(d) ஆழி (4) கப்பல்
(a) (b) (c) (d)
(A) 2 1 4 3
(B) 3 1 4 2
(C) 1 2 3 4
(D) 4 2 3 1
(E) விடைதெரியவில்லை.
ANSWER KEY: B
42) சரியான பொருளை அறிக.
காருகர்
(A) நெய்பவர்
(B) ஓவியர்
(C) வெற்றிலை விற்போர்
(D) எண்ணெய் விற்போர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
43) பிழை திருத்துக. (ஒரு – ஓர்)
ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
(A) ஓர் அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
(B) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
(C) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.
(D) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
44) பிழை திருத்துக (ஒரு – ஓர்; அது – அஃது)
அஃது நகரத்திற்குச் செல்லும் ஓர் வழிச்சாலை
(A) அது நகரத்திற்குச் செல்லும் ஓர்வழிச்சாலை
(B) அஃது நகரத்திற்குச் செல்லும் ஒருவழிச்சாலை
(C) அது நகரத்திற்குச் செல்லும் ஒருவழிச்சாலை
(D) அஃது நகரத்திற்குச் செல்லும் ஓர்வழிச்சாலை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
45) எவ்வளவு உயரமான மரம்! இது எவ்வகைத் தொடர்!
(A) உணர்ச்சித் தொடர்
(B) செய்தித் தொடர்
(C) வினாத் தொடர்
(D) கட்டளைத் தொடர்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
46) தொடர் வகையைக் கண்டறிக.
கோதை தேர்வில் வெற்றி பெற்றாள்
(A) வினாத் தொடர்
(B) செய்தித் தொடர்
(C) கட்டளைத் தொடர்
(D) உணர்ச்சித் தொடர்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: B
47) பிழையற்ற தொடரைத் தேர்க.
(A) ஆயிசா பூக்களைப் பரிக்க முயற்சித்தாள்
(B) ஆயிசா பூக்களைப் பறிக்க முயற்சித்தாள்
(C) ஆயிசா பூக்களைப் பறிக்க முயன்றாள்
(D) ஆயிசா பூக்களைப் பரிக்க முயன்றாள்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
48) சொற்களின் கூட்டுப் பெயர்கள்
(a) ஆட்டு 1. குவியல்
(b) எறும்பு 2. மந்தை
(c) கல் 3. உருண்டை
(d) நூல் 4. சாரை
(a) (b) (c) (d)
(A) 2 3 1 4
(B) 2 4 1 3
(C) 1 2 3 4
(D) 3 2 1 4
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
49) சொல்லுக்கேற்ற கூட்டப் பெயர் காண் : பழம்
(A) பழங்கள்
(B) பழம்கள்
(C) பழக்கள்
(D) பழக்குலை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
50) பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
“ஓங்கு பரிபாடல்” – நூலின் ஆசிரியர் கண்டறிக.
(A) பரஞ்சோதி முனிவர்
(B) கீரந்தையார்
(C) குமரகுருபரர்
(D) இளங்கோவடிகள்
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: B
51) எட்டுத் தொகை நூல்களுள் ஒன்று
(A) ஐங்குறுநூறு
(B) சிலப்பதிகாரம்
(C) முல்லைப் பாட்டு
(D) சீவக சிந்தாமணி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
52) ”சதாவதானி” – என்பதன் பொருள் – அறிக.
(A) நூறு பாடல்
(B) நூறு பொருள்
(C) நூறு செயல்கள்
(D) நூறு கலைகள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
53) Voyage சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி.
(A) கடற் பயணம்
(B) பயணப் படகுகள்
(C) கலப்படம்
(D) நடை பயணம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
54) சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க: Nautical Mile
(A) ஏவு ஊர்தி
(B) மின்னணுக் கருவிகள்
(C) ஏவுகணை
(D) கடல்மைல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
55) கலைச்சொல் அறிதல் : Antibiotic
(A) நோய்
(B) ஒவ்வாமை
(C) பக்க விளைவு
(D) நுன்ணுயிர் முறி
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: D
56) கூற்று காரணம் சரியா? தவறா?
கூற்று : கல்விக் கண் திறந்தவர் என்று பெரியாரால் பாரட்டப்பட்டவர் பெருந்தலைவர் காமராசர்.
காரணம் : 1. இலவசக் கட்டாயக் கல்வியை நடைமுறைப்படுத்தினார்.
2. மதிய உணவு திட்டத்தையும், சீருடைத் திட்டத்தையும் அறிமுகம் செய்தல்.
(A) கூற்று தவறு. காரணம் 1, 2 சரி.
(B) கூற்று தவறு. காரணம் 1 சரி, 2 தவறு.
(C) கூற்று சரி. காரணம் 1 தவறு, 2 சரி.
(D) கூற்று சரி. காரணம் 1 சரி, 2 சரி.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
57) கூற்று (i) : தமிழின் தொன்மையை உலகறியச் செய்தவர் பரிதிமாற் கலைஞர்
கூற்று (ii) : தனித் தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற் கலைஞர்
கூற்று (iii): மொழி ஞாயிறு மறைமலையடிகள்
(A) கூற்று (i), (ii) தவறு. கூற்று (iii) சரி
(B) கூற்று (i) தவறு, கூற்று (ii) சரி, கூற்று (iii) தவறு
(C) அனைத்தும் சரி
(D) அனைத்தும் தவறு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
58) குறில் – நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு அறிக.
பலம் – பாலம்
(A) வலிமை – ஆற்றுப் பாலம்
(B) சோர்வு – இணைப்பு
(C) மகிழ்ச்சி – ஆற்றுப் பாலம்
(D) அழுகை – இணைப்பு
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
59) குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக.
தொடு – தோடு
(A) ஒன்று மற்றொன்றின் மீது படுதல் – ஆரம்
(B) ஒன்று மற்றொன்றின் மீது படுதல் – காதணி
(C) ஒன்று மற்றொன்றின் மீது படுதல் – வளையல்
(D) ஒன்று மற்றொன்றின் மீது படுதல் – சலங்கை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: B
60) குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக.
பணம் – பாணம்
(A) விளை – அம்பு
(B) கரும்பு – அம்பு
(C) அம்பு – விலை
(D) காசு – அம்பு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
61) இரு பொருள் தருக.
இடும்பை
(A) துன்பம், வறுமை
(B) மகிழ்ச்சி, இன்பம்
(C) அழுகை, வருத்தம்
(D) சிரிப்பு, ஈகை
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: A
62) இரு பொருள் தருக.
துளை
(A) சுங்கம், வரி
(B) துவாரம், தொந்தரவு
(C) வலிமை, வலி
(D) அமிழ், முழுகு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
63) இரு பொருள் தருக.
வேண்டல்
(A) விரும்புகை, விண்ணப்பம்
(B) கேட்டல், விரும்புதல்
(C) பேசுதல், கூறுதல்
(D) கண்டல், கேட்டல்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
64) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க.
(ஓவிய எழுத்து)
(A) ஓவிய வரி வடிவத்தை ______________ என்பர்.
(B) செப்பேடுகளில் காணப்பட்ட வரிவடிவம் ____________ என்பர்.
(C) கற்பாறையில் காணப்பட்ட வரிவடிவம் __________ என்பர்.
(D) தாளில் காணப்பட்ட வரிவடிவம் _______________ என்பர்.
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
65) அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:
(வலசை போதல்)
(A) பறவைகள் இடம்பெயர்தலை _____________ என்பர்
(B) விலங்குகள் இடம்பெயர்தலை _____________ என்பர்
(C) தாவரங்கள் இடம்பெயர்தலை ____________ என்பர்
(D) மனிதர்கள் இடம்பெயர்தலை ________________ என்பர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
66) சரியான இணைப்புச் சொல் தேர்க.
கேள்வி கேட்கும் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான். ___________ குழந்தைகள் தான் இவ்வுலகின் முதல் விஞ்ஞானிகள்
(A) எனவே
(B) ஆகையால்
(C) அதனால்
(D) ஏனெனில்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
67) சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
பூமி அகல் விளக்காகவும், கடல் நெய்யாகவும் கதிரவன் சுடராகவும் உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. ____________ இப்பாடல் உருவக அணி.
(A) எனவே
(B) எதனால்
(C) ஏனெனில்
(D) மேலும்
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: A
68) சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு.
நச்சுக் காற்று ஓசோன் படலத்தைத் தாக்குகிறது. _________ புறஊதாக் கதிர்கள் உங்களைத் தாக்குகின்றன.
(A) இதனால்
(B) மேலும்
(C) ஏனெனில்
(D) ஆனால்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
69) சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன
(A) யாது
(B) எது
(C) எவை
(D) யாவை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
70) சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
கிழவனும் கடலும் கதையின் நாயகன்
(A) என்ன
(B) எது
(C) யார்
(D) எப்படி
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
71) பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு
நல்லோர் வாழ்த்தினார் ____________
(A) இறந்த காலம்
(B) நிகழ் காலம்
(C) எதிர் காலம்
(D) எதுவுமில்லை
(E) விடைதெரியவில்லை.
ANSWER KEY: A
72) கண்மணி நாளை பாடம் ___________ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக
(A) படித்தோம்
(B) படிக்கிறோம்
(C) படிப்பாள்
(D) படிக்கிறாள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
73) பொருத்தமான காலம் கண்டறிக
(A) மாடு புல் மேயும் (இறந்த காலம்)
(B) மாடு புல் மேய்கின்றன (எதிர் காலம்)
(C) மாடு புல் மேய்ந்தது (இறந்த காலம்)
(D) மாடு புல் மேயும் (நிகழ் காலம்)
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
74) இருசொற்களை இணைத்து சரியான புதிய சொல் அமைக்கப்பட்டத் தொடரைத் தேர்க.
மழை, பூ, பொன், வான், மேகலை, மணி, மேகம், செய்
(A) பூமணி, மழைவான், மழைமேகம்
(B) மணிமேகலை, வான்மழை, பூமணி
(C) மேகம்செய், பொன்மேகம், பொன்மணி
(D) பூமணி, மணிமேகலை, செய்பொன்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
75) சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.
பூ
(A) வயல்
(B) சோலை
(C) கொல்லை
(D) புதர்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
76) பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
”மலர்விழி சுவற்றில் எழுதுறாள்”.
(A) மலர்விழி சுவத்தில் எழுதுகிறாள்
(B) மலர்விழி சுவரில் எழுதுகிறாள்
(C) மலர்விழி சுவரில் எழுதுறாள்
(D) மலர்விழி சுவறில் எழுதுகிறாள்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: B
77) பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு
அதுக்குள்
(A) அதுக்கு
(B) அல்ல
(C) ஆதற்கு
(D) அதற்குள்
(E) விடைதெரியலில்லை
ANSWER KEY: D
78) பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு
வரிசையில் ஒழுங்காக நில்லு
(A) வரிசையில் நேராக நில்லு
(B) வரிசையில் ஒழுங்காக நிள்
(C) வரிசையில் ஒழுங்காக நிழ்
(D) வரிசையில் ஒழுங்காக நில்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
79) நிறுத்தற்குநிகளை அறிதல்
கபிலன் தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டாள்
(A) கபிலன், “தன் தந்தையிடம்” இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்?
(B) கபிலன் தன்தந்தையிடம், “இன்று மாலை விளையாடப் போகட்டுமா”? என்று கேட்டான்.
(C) “கபிலன்” தன்தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா, என்று கேட்டான்.
(D) கபிலன் தன் தந்தையிடம், ‘இன்று’ மாலை, விளையாடப் போகட்டுமா, என்று கேட்டான்.
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: B
80) நிறுத்தற்குறிகளை அறிதல்
சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக.
(A) நல்லவன் வாழ்வான்; தீயவன் தாழ்வான்.
(B) நல்லவன் வாழ்வான், தீயவன் தாழ்வான்.
(C) நல்லவன், வாழ்வான், தீயவன், தாழ்வான்.
(D) நல்லவன் வாழ்வான் தீயவன் தாழ்வான்.
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: A
81) ஊர்ப்பெயரின் மருஉவை எழுதுக
திருச்சிராப்பள்ளி
(A) திருச்சிரா
(B) திருச்சி
(C) திருபள்ளி
(D) திருவை
(E) விடைதெரியலில்லை
ANSWER KEY: B
82) ஊர்ப்பெயர்களின் சரியான மரூஉவை தெரிவு செய்க.
நாகப்பட்டினம்
(A) நாகப்பட்டனம்
(B) நாகைப்பட்டினம்
(C) நாகப்பட்டிணம்
(D) நாகை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
83) ஊர்ப்பெயர்களின் மரூ௨வை எழுதுக.
தேவகோட்டை
(A) தேவர் கோட்டை
(B) தேவோட்டை.
(C) தேவர்புரம்
(D) தேவரம்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: B
84) பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் தருக.
ஜங்கிள்
(A) காடு
(B) கார்ட்டூன்
(C) இனிப்பு
(D) சோலை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
85) பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக.
டி.வி.
(A) தொலைக்காட்சி
(B) வானொலி
(C) திரைப்படம்
(D) மின்னஞ்சல்
(E) விடைதெரியவில்லை.
ANSWER KEY: A
86) இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
சதம்
(A) பத்து
(B) ஆயிரம்
(C) நூறு
(D) லட்சம்
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: C
87) விடை வகைகள்
”உனக்குக் கதை எழுதத் தெரியுமா”? என்ற வினாவிற்கு ”கட்டுரை எழுதத் தெரியும்” என்று கூறுவது
(A) இனமொழி விடை
(B) ஏவல் விடை
(C) சுட்டு விடை
(D) மறை விடை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
88) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
சரியான இணையைக் கண்டறிக.
(A) வினா எதிர் வினாதல் விடை – நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று கூறுதல்
(B) உற்றது உரைத்தல் விடை – என்னுடன் ஊருக்கு வருவாயா? வராமல்இருப்பேனா?
(C) உறுவது கூறல் விடை – நீ விளையாடவில்லையா? என்ற வினாவிற்கு கால்வலிக்கும் என்று உறுவதை உரைப்பது.
(D) இனமொழி விடை – என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா என்று கூறுவது.
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: C
89) கலைச்சொல் தருக.
HIGH COURT
(A) உயர்நீதி மன்றம்
(B) உச்ச நீதி மன்றம்
(C) உள்ளாட்சி மன்றம்
(D) சட்ட மன்றம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
90) அலுவல் சார்ந்த சொற்கள்
Hearing
(A) உறுதி
(B) ஆவணம்
(C) விசாரணை
(D) முறையீடு
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
91) கலைச் சொல் அறிக
Clear income
(A) தெளிவான ஆதாயங்கள்
(B) அப்பழுக்கற்ற உரிமை நிலை
(C) தீர்க்கப்பட்ட பிணையம்
(D) தெளிவான வருமானம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
92) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல
(A) தற்செயல் நிகழ்வு
(B) எதிர்பாரா நிகழ்வு
(C) வெளிப்படைத் தன்மை
(D) ஒற்றுமையின்மை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
93) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக.
கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல
(A) தற்செயல் நிகழ்வு
(B) எதிர்பாரா நிகழ்வு
(C) பயனற்ற செயல்
(D) ஒற்றுமையின்மை
(E) விடைதெரியவில்லை
ANSWER KEY: B
94) உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
(A) ஒற்றுமையின்மை
(B) வெளிப்படைத்தன்மை
(C) தடையின்றி மிகுதியாக
(D) ஒற்றுமை
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
95) “ஓவியம் வேலனால் வரையப்பட்டது”
இது எவ்வகை வாக்கியம் எனக் கூறுக.
(A) கட்டளைத் தொடர்
(B) செய்வினைத் தொடர்
(C) செயப்பாட்டுவினைத் தொடர்
(D) பிறவினைத் தொடர்
(E) விடை தெரியவில்லை.
ANSWER KEY: C
96) எவ்வகை வாக்கியம் எனத் தெரிவு செய்க
விடைத் தாள்களை வருவித்தார்
(A) பிறவினை வாக்கியம்
(B) செய்வினை வாக்கியம்
(C) செயல்பாட்டு வினை வாக்கியம்
(D) தன் வினை வாக்கியம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
97) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்த காலத்தில் ஆநிரைகளைச் சொத்தாகக் கருதினர்.
(A) சிறுகுழுக்களாக வாழ்ந்த காலத்தில் மக்கள் சொத்தாக எதைக் கருதினர்?
(B) சிறுகுழுக்கள் என்ன சொத்தாகக் கருதினர்?
(C) ஆநிரையைச் சொத்தாக கருதியவர்கள் யார்?
(D) மக்கள் வாழ்ந்த காலத்தில் சொத்து எது?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: A
98) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
உவமையும் உவமேயமும் ஒன்றாக அமைவது உருவக அணி.
(A) உவமை என்பது யாது?
(B) உவமை அணியை விளக்குக?
(C) உருவக அணியை விளக்குக?
(D) உவமேயம் என்பது யாது?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: C
99) விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
கரகாட்டத்தைக் கும்பாட்டம் என்றும் குடக்கூத்து என்றும் கூறுவர்.
(A) கரகாட்டம் என்றால் என்ன?
(B) கரகாட்டம் எக்காலங்களில் நடைபெறும்?
(C) கரகாட்டத்தின் வெவ்வேறு வடிவங்கள் யாவை?
(D) கரகாட்டத்தின் வேறுபெயர்கள் யாவை?
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D
100) வாசல் + அலங்காரம் என்பதனைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
(A) வாசலிங்காரம்
(B) வாசலலங்காரம்
(C) வாசல் அலங்காரம்.
(D) வாசலங்காரம்
(E) விடை தெரியவில்லை
ANSWER KEY: D