TNPSC Group 4 General Tamil Model Question Paper with Answers

TNPSC Group 4 General Tamil Model Question Paper with Answers

1. ஊர்ப்‌ பெயர்களின்‌ மரூ௨வை எழுதுக

உதகமண்டலம்‌

(A) உதயகிரி

 (B) உதய்ப்பூர்‌

(C) உதகை

 (D) உசிலம்பட்டி

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

2. ஊர்ப்‌ பெயரின்‌ மரூ௨வை எழுதுக.

வண்ணாரப்பேட்டை

(A) வண்ணார்‌ பெட்‌

(B) வண்ணை

(C) வாசர்மேன்‌ பெட்‌

(D) மண்ணூர்‌

(E) விடை தெரியவில்லை.

ANSWER KEY : B

3. ஊர்ப்‌ பெயர்களின்‌ மரூ௨வை எழுதுக.

நாகப்பட்டினம்‌

(A) நாகூர்

 (B) பட்டினம்‌

(C) நாகை

(D)  நாப்பட்டினம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

4.  கலைச்சொல்‌ அறிக.

Thesis

(A) ஆய்வேடு

(B) சின்னம்‌

(C) பதிவேடு

 (D) குறியீட்டியல்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

5. பிற மொழிச்‌ சொல்லுக்கு இணையான தமிழ்ச்‌ சொல்லைக்‌ கண்டறிக.

சினிமா

(A) திரைப்படம்

(B) மின்னஞ்சல்‌

(C) தொலைக்காட்சி

 (D) வானொலி

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

6. ‘இந்த வேலையைச்‌ செய்வாயா?’ என்ற வினாவிற்கு ‘நீயே செய்‌’ என்று கூறுவது

(A)  மறை விடை

(B) இனமொழி விடை

(C) வினா எதிர்‌ வினாதல்‌ விடை

(D) ஏவல் விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

7.  விடைவகைகள்‌ :

‘கடைத்தெரு எங்குள்ளது?’ என்ற வினாவிற்கு, ‘இப்பக்கத்தில்‌ உள்ளது’ எனக்‌ கூறல்‌

(A) சுட்டு விடை

(B) மறை விடை

(C) நேர் விடை

(D) ஏவல்‌ விடை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

8. விடை வகைகள்‌ :

’கடைக்குப்‌ போவாயா?’ என்ற கேள்விக்குப் ‌ ‘போவேன்‌’ என்று உடன்பட்டுக்‌ கூறல்‌.

(A) சுட்டு விடை

 (B) மறை விடை

(C) நேர் விடை

 (D) ஏவல்‌ விடை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

9. அலுவல்சார்ந்த சொற்கள்‌ (கலைச்சொல்‌)

Artificial Intelligence

(A) இயற்கை ஓவியம்

‌ (B) மானிடதத்துவம்‌

(C) செயற்கை நுண்ணறிவு

(D) மீத்திறன்‌ நுண்ணறிவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

10. கலைச்சொல்லின்‌ பொருளறிந்து விடையை எழுதுக.

Cultural Academy

(A) பண்பாட்டு நிறுவனம்

‌ (B) பண்பாட்டு மையம்‌

(C) பண்பாட்டுக்‌ குழுமம்‌

 (D) பண்பாட்டுக்‌ ‌ கழகம்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : D

TNPSC Group 4 General Tamil Model Question Paper with Answers:

11. பின்வரும்‌ கலைச்சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல்லை கண்டறிந்து எழுதுக.

Ticket Inspector

(A)  சீட்டு அலுவலர்‌

 (B) பயணச்‌ சீட்டு அலுவலர்‌

(C) பயணச் சீட்டு ஆய்வர்‌

 (D) சீட்டு ஆய்வர்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

12. பாரதியின்‌ பாடல்கள்‌ அனைவருக்கும்‌ எளிதில்‌ பொருள்‌ விளங்கும்‌ -இத்தொடர்‌ உணர்த்தும்‌ பொருளுக்கு ஏற்ற உவமைத்‌ தொடரைத்‌ தேர்க.

(A) மடை திறந்த வெள்ளம்‌ போல

(B) பசுமரத்து ஆணி போல

(C) உள்ளங்கை நெல்லிக்கனி போல

 (D) விழலுக்கு இறைத்த நீர்போல

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

13. காக்கை உட்காரப்‌ பனம்பழம்‌ விழுந்தது போல – இவ்வுவமையால்‌ அறியப்படும்‌ பொருளினைத்‌ தேர்க.

(A) எதிர்பாரா நிகழ்வு

(B) தற்செயல் நிகழ்வு

(C) பயனற்ற நிகழ்வு

 (D) எதிர்பார்த்த நிகழ்வு

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

14. கொடிகட்டிப்‌ பறத்தல்‌ எனும்‌ உவமை கூறும்‌ பொருளைக்‌ கண்டறிக.

(A) ஆராய்ந்து பாராமல்‌ செயல்படுதல்‌

(B) எல்லோராலும்‌ இகழப்படல்‌

(C) புகழ்பெற்று விளங்குதல்

‌ (D) உயரமாக இருத்தல்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

15. எவ்வகை வினை

பள்ளிக்குப்‌ புத்தகங்கள்‌ வருவித்தார்‌

(A) தன்வினை

(B) பிறவினை

(C) செய்வினை

 (D) செயப்பாட்டு வினை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

16. எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டெழுதல்‌

“தந்தை மகனை நன்றாகப்‌ படிக்க வைத்தார்‌” எவ்வகை வாக்கியம்‌

(A) தன்வினை

 (B) பிறவினை

(C) செய்வினை

 (D) செயப்பாட்டு வினை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

17. எவ்வகை வாக்கியம்‌ எனக்‌ கண்டறிக

(A) உள்ளே பேசிக்கொண்டிருப்பவர்‌ யார்‌ – பெயர்ப்‌ பயனிலைத்‌ தொடர்‌

(B) பூக்களைப்‌ பறிக்காதீர்‌ – கட்டளைத்‌ தொடர்‌

(C) எவ்வளவு உயரமான மரம்‌ – வினாத்‌ தொடர்‌

(D) இது நாற்காலி, அவன்‌ மாணவன்‌ – உணர்ச்சித்‌ தொடர்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

18. விடைக்கேற்ற வினா அமைக்க :

பானையின்‌ வெற்றிடமே நமக்கும்‌ பயன்படுகிறது

(A) பானையின் எப்பகுதி நமக்குப்‌ பயன்படுகிறது

(B) பானை எப்படி நமக்குப்‌ பயன்படுகிறது

(C) பானை எதனால்‌ நமக்குப்‌ பயன்படுகிறது

(D)  பானை எங்கு நமக்குப்‌ பயன்படுகிறது?

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

19.  விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடுத்தல்‌

“தமிழர்‌ பண்பாட்டில்‌ வாழை இலைக்குத்‌ தனித்த இடமுண்டு”

(A) தமிழர் ‌பண்பாட்டில்‌ எதற்கு தனித்த இடமுண்டு?

(B) வாழையிலை அதிகம்‌ கிடைக்கும்‌ மாநிலம்‌ எது?

(C) வாழை இலை எதற்குப்‌ பயன்படுகிறது ?.

(D) தமிழர்‌ பண்பாடு என்றால்‌ என்ன?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

20. விடைக்கேற்ற வினாவைத்‌ தேர்ந்தெடு

பகுத்தறிவுக்‌ கவிராயர்‌ என போற்றப்படுபவர்‌ உடுமலை நாராயணகவி

(A)  யார் பகுத்தறிவுக்‌ கவிராயர்‌ என போற்றப்படுபவர்‌?

(B) எதனால்‌ பகுத்தறிவுக்‌ கவிராயர்‌ என போற்றப்படுபவர்‌?

(C) எங்கு பகுத்தறிவுக்‌ கவிராயர்‌ என ‘போற்றப்படுகிறார்‌?

(D) ஏன்‌ பகுத்தறிவுக்‌ கவிராயர்‌ எனப்‌ போற்றப்படுகிறார்‌?

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

21.  இரு வினைகளின்‌ பொருள்‌ வேறுபாடு அறிதல்‌

பணிந்து – பணித்து

(A) பணிவுடன்‌ நடத்தல்‌ – கட்டளை இடுதல்‌

(B) பணியாமை – ஏவுதல்‌

(C) அருளிச்‌ செய்தல்‌ – செய்யாமை

(D) கொடுத்தல்‌ – செய்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

22. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

(பகைவரை, பரணி, வென்றதைப்‌, இலக்கியம்‌, பாடுவது)

(A) பகைவரை இலக்கியம்‌ வென்றதைப்‌ பாடுவது பரணி

(B) இலக்கியம்‌ பாடுவது வென்றதைப்‌ பரணி பகைவரை

(C) பகைவரை வென்றதைப்‌ பாடுவது பரணி இலக்கியம்‌

(D) பரணி இலக்கியம்‌ வென்றதைப்‌ பாடுவது பகைவரை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

23. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்‌.

(A) நல்லவர்‌ பெயர்‌ பெற என்ன செய்யலாம்‌ நாம்‌ என்னும்‌

(B) நல்லவர்‌ என்னும்‌ பெயர்‌ பெற என்ன செய்யலாம்‌ நாம்‌

(C) நல்லவர்‌ என்னும்‌ பெயர்‌ பெற நாம்‌ என்ன செய்யலாம்‌

(D) நாம்‌ பெயர்‌ பெற நல்லவர்‌ என்னும்‌ என்ன செய்யலாம்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

24. சொற்களை ஒழுங்குபடுத்துக.

(A) தலைவர்‌ நாளை தமிழகம்‌ குடியரசு வருகிறார்‌.

(B) நாளை வருகிறார்‌ தமிழகம்‌ தலைவர்‌ குடியரசு

(C) குடியரசுத்‌ தலைவர்‌ நாளை தமிழகம்‌ வருகிறார்‌

(D) தலைவர்‌ தமிழகம்‌ குடியரசு நாளை வருகிறார்‌.

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

25. அகரவரிசைப்படுத்துக

(A) தவில், படகம்‌, பிடில்‌, பேரியாழ்‌

(B) படகம்‌, பிடில்‌, பேரியாழ்‌, தவில்‌

(C) பேரியாழ்‌, பிடில்‌, படகம்‌, தவில்‌

(D) தவில்‌, பிடில்‌, படகம்‌, பேரியாழ்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

26. பின்வரும்‌ சொற்களை அகர வரிசைப்படுத்துக.

தேவை, ஐயம்‌, சிறப்பு, தமிழ்நாடு, கண்ணன்‌

(A) ஐயம், கண்ணன்‌, சிறப்பு, தமிழ்நாடு, தேவை

(B) கண்ணன்‌, ஐயம்‌, தமிழ்நாடு, சிறப்பு, ஐயம்‌

(C) ஐயம்‌, சிறப்பு, கண்ணன்‌, தமிழ்நாடு, தேவை

(D) தேவை, தமிழ்நாடு, சிறப்பு, ஐயம்‌, கண்ணன்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

27.  அகர வரிசைப்படி சொற்களை சீர்‌ செய்க.

(A) படகம்‌, தவில்‌, மகுடி, நாகசுரம்‌, கணப்பறை

(B) படகம்‌, மகுடி, கணப்பறை, நாகசுரம்‌, தவில்‌

(C) கணப்பறை, நாகசுரம்‌, தவில்‌, படகம்‌, மகுடி

(D) கணப்பறை, தவில்‌, நாகசுரம்‌, படகம்‌, மகுடி

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : D

28.  வேர்ச்‌ சொல்லின்‌ வினைமுற்றைக்‌ காண்க.

பாடி

(A)  பாடு

(B)  பாடின

(C) பாடிய

(D) பாடினாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

29.  வினைமுற்று

கீழ்வருவனவற்றுள்‌ ஏவல்‌ வினைமுற்றுச்‌ சொல்‌

(A) செல்க

(B) வாழ்க

(C) ஓடு

 (D) வாழிய

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

30. விளைவது – வேர்ச்‌ சொல்லைத்‌ தருக.

(A) விளை

(B) விலை

(C) விழை

(D) விளைந்து

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

31.“வருக” – வேர்ச்சொல்லைத்‌ தருக.

(A)  வரு

(B) வா

(C) வாரு

(D) வந்த

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

32. அறியேன்‌ – வேர்ச்‌ சொல்லைத்‌ தருக.

(A) அரி

(B) அறி

(C) அறிந்த

(D) அரிந்த

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

33. ஒரு பொருள்‌ தரும்‌ பல சொற்கள்‌

கொத்து, தாறு, கதிர்‌, சீப்பு

(A) அடி வகை

(B) குலை வகை

(C) மணி வகை

(D) இளம்‌ பயிர்‌ வகை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

34. ஒரு பொருள்‌ பல சொற்கள்‌ அறிதல்‌.

மலைக்குகை

A) முழை, முழவு

(B) பிலம்‌, முழை

(C) பிலம்‌, முழவு

(D) முழை, பிளவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

35. ஒலி மற்றும்‌ பொருள்‌ வேறுபாடறிந்து, சரியான இணையைத்‌ தெரிவு செய்க.

வாளை – வாழை

(A) அரம்‌ – கன்று

(B)  மீன்‌ – மரம்‌

(C) கருவி – மீன்‌

(D) தோட்டம்‌ – தோப்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

36. ஒலி மற்றும்‌ பொருள்‌ வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்‌.

‘சிரம்’  என்பதன்‌ பொருள்‌

(A) தலை

(B) தளை

(C) கடினம்

‌ (D) கலை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

37. ஒலி மற்றும்‌ பொருள்‌ வேறுபாடு அறிந்து சரியான சொல்லைத்‌ தேர்ந்தெடு

கிண்ணம்‌ – கின்னம்‌

(A)  சிறு பாத்திரம்‌ – துன்பம்

‌ (B) குவளை – கீழ்மை

(C) குவளை – துன்பம்‌

(D) சிறுபாத்திரம்‌ – மகிழ்ச்சி

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

38.“கிரெடிட்‌ கார்டு” இணையான தமிழ்ச்சொல்‌

(A) பற்று அட்டை

(B) பணத்தாள்‌

(C) காசோலை

 (D) கடன் அட்டை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

39. “டிஜிட்டல்‌” இணையான தமிழ்ச்‌ சொல்‌.

(A)  கணினிமயம்‌

(B) மின்னணுமயம்

(C) இணையத்தளம்‌

 (D) வணிகமயம்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

40. வழுவுச்‌ சொற்களை நீக்குதல்‌.

பிழையற்ற தொடரைத்‌ தேர்க.

(A) செழியன்‌ வரும்‌

(B) செழியன் வந்தான்‌

(C) செழியன்‌ வந்தார்கள்‌

 (D) செழியன்‌ வந்தது

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

41. சந்திப்பிழை நீக்கி எழுதுக.

(A) தமிழுக்கு முத்தமிழ்‌ எண்ணுச்‌ சிரப்புப்‌ பெயரும்‌ உண்டு

(B) தமிழுக்கு முத்தமிழ்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயரும்‌ உண்டு.

(C) தமிழுக்கும்‌ முத்தமிழ்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயறும்‌ உண்டு

(D) தமிழுக்குக்‌ முத்தமிழ்‌ என்னும்‌ சிரப்புப்‌ பெயரும்‌ உன்டு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

42. சரியான மரபுச்‌ சொல்லை இணைக்க.

       கமுகு (பாக்கு) __________.

(A) ஓலை

 (B) கூந்தல்‌

(C) தோகை

(D) மடல்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

43. இலக்கண வகைகள்‌ : பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌

(A) எழுத்து

(B) சொல்‌

(C) தொடை

(D) அணி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

44. பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌

       பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து

(A) பத்து

(B) பாட்டு

(C) பாக்கு

(D) பஞ்சு

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : D

45. பொருந்தாச்‌ சொல்லைக்‌ கண்டறிதல்‌

புணை, மிதவை, நீகான்‌, தெப்பம்‌

(A) தெப்பம்

‌ (B) நீகான்‌

(C) புணை

(D) மிதவை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

46. ஐயம்‌ – என்னும்‌ சொல்லுக்குரிய எதிர்ச்சொல்‌

(A) சோர்வு

 (B) தெளிவு

(C) விலகு

(D) அறிவு

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

47. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்‌

‘ஊக்கம்‌’ என்ற சொல்லின்‌ எதிர்ச்சொல்‌_________.

(A) தெளிவு

 (B) சோர்வு

(C) விலகு

(D) பொய்மை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

48. எதிர்ச்சொல்‌ எழுதுக

எளிது

(A) அரிது

 (B) பெரிது

(C) கொடிது

(D) பழையது

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

49. ‘பூட்டுங்கதவுகள்‌’ – என்னும்‌ சொல்லைப்‌ பிரித்தெழுதக்‌ கிடைப்பது.

(A) பூட்டு + கதவுகள்

‌(B) பூட்டும் + கதவுகள்‌

(C) பூட்டின்‌ + கதவுகள்‌

(D) பூட்டிய + கதவுகள்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

50. ‘வானம்‌ +அறிந்த’ – என்பதனைச்‌ சேர்த்தெழுதக்‌ கிடைக்கும்‌ சொல்‌

(A) வானம்‌ அறிந்த

 (B) வான்‌ அறிந்த

(C) வானமறித்த

 (D) வான்‌ மறிந்த

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

51. ‘மானம்‌ + இல்லா’ – என்பதனைச்‌ சேர்த்து எழுதக்‌ கிடைக்கும்‌ சொல்‌

(A) மானம்‌ இல்லா

(B) மானமில்லா

(C) மானமல்லா

 (D) மானம்‌ மில்லா

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

கீழ்க்கண்ட பத்தியைப்‌ படித்து வினாவிற்குரிய சரியான விடையைத்‌ தேர்ந்தெடு (52-56)

சூரிய குடும்பத்தில்‌ சூரியனே முதன்மையாகப்‌ போற்றப்படுகிறது. சூரியனைச்‌சுற்றிக்‌ கோள்கள்‌ சூழ்ந்துள்ள. பண்டைத்‌ தமிழர்‌ சூரியன்‌ முதலான ஒன்பது கோள்களைக்‌ கோள்மீன்‌ எனவும்‌, அசுவினி முதலான இருபத்தேழு விண்மீன்களை நான்மீன்‌ எனவும்‌ பகுத்துக்‌ கூறியதுடன்‌ ஒவ்வொரு கோளுக்கும்‌ காரணப்பெயரிட்டு அழைத்தனர்‌. செந்நிறமுடைய கோளை செவ்வாய்‌ என்றனர்‌. புதிதாக அறிந்ததனால்‌ புதன்‌ என்றனர்‌. இக்கோளுக்கு ‘அறிவன்‌’ எனவும்‌ பெயருண்டு. வியா என்றால்‌ பெரிய எனப்‌ பொருள்படும்‌. எனவே வானில்‌ பெரிய கோளாக வலம்‌ வருவதனை வியாழன்‌ என  அழைத்தனர்‌. வெண்மை நிறமுடைய கோள்‌ வெள்ளி எனப்பட்டது. இவையனைத்தும்‌ சங்கப்‌ புலவர்களின்‌ வானியல்‌ அறிவையும்‌ சிந்தனையையும்‌ புலப்படுத்துவதாக உள்ளன.

52.  சூரிய குடும்பத்தில்‌ முதன்மையான கோள்‌ எது?

(A) கோள்மீன்‌

 (B) சூரியன்‌

(C)  புதன்‌

(D) வியாழன்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

53.  பண்டையத்‌ தமிழர்‌ சூரியன்‌ முதலான ஒன்பது கோள்களை எவ்வாறு அழைத்தனர்‌?

(A) வியாழன்‌

(B) புதன்‌

(C) வெள்ளி

 (D) கோள்மீன்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

54.  புதன்‌ கோளுக்கு வழங்கப்படும்‌ வேறு பெயர்‌ யாது?

(A) அறிவன்‌

‌ (B) வியாழன்‌

(C) வெள்ளி

(D) கோள்மீன்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

55. வானில்‌ பெரிய கோளாக வலம்‌ வரும்‌ கோள்‌ எது?

(A)  புதன்

(B) அறிவன்‌

(C) வியாழன்

‌ (D) வெள்ளி

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

56. சங்கப்‌ புலவர்கள்‌ _________ அறிவையும்‌ சிந்தனையையும்‌ பெற்றிருந்தனர்‌.

(A) வானியல்

‌ (B) சோதிடம்‌

(C) சூரியன்‌

(D) புதன்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

57. கலைச்‌ சொற்களை அறிதல்‌

       Classical literature

(A) வட்டார இலக்கியம்‌

 (B) நவீன இலக்கியம்‌

(C) செவ்விலக்கியம்‌

(D) பக்தி இலக்கியம்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

58. பிழை திருத்துக.

பிழையற்ற தொடரைத்‌ தெரிவு செய்க.

(A) அவை அன்று

 (B) அவை அல்ல

(C) அவை இல்லை (D) அவை அல்லர்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

59.  பொருத்துக.

(a) ஆண்பால்‌             (1) அல்ல

(b) பெண்பால்‌           (2) அன்று

(c) ஒன்றன்பால்‌     (3) அல்லேன்‌

(d) பலவின்பால்‌     (4) அல்லள்‌

                (a)          (b)          (c)           (d)

(A)           2             3              1              4

(B)          4              3              2              1‌

(C)          3              4             2              1

(D)          1              2              3              4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

60. கீழ்க்கண்டவற்றுள்‌ சரியான தொடரைக்‌ கண்டறிக.

(A)  நான்‌ அல்ல

(B) நான்‌ அன்று

(C) நான்‌ அல்லன்‌

(D) நான்‌ அல்லேன்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : D

61. சொல்‌ – பொருள்‌ – பொருத்துக.

(a) ஆலாலம்‌              (1) பிரமன்‌

(b) அந்தம்        ‌ (2) விஷ்ணு

(c) அயன்‌                        (3) நஞ்சு

(d) மால்‌                           (4) முடிவு

                (a)          (b)          (c)           (d)         

(A)          4              1              3              2

(B)          3              4              1              2

(C)          1              3              4              2

(D)          2              1              3              4

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

62.  சொல்‌ – பொருள்‌ – பொருந்துக.

(a)  கதலி                       (1) கமுகு

(b) பூகம்‌                           (2) மாளிகை

(c) கவரி          (3) வாழை.

(d)  மன்றல்‌                  (4) சாமரை

                (a)          (b)          (c)          (d)

(A)          3               4               2              1

(B)          3              1              4             2

(C)          4              3              1              2

(D)          4              2              1              3

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

63. பிழை திருத்துதல்‌ (ஒரு-ஓர்‌)

சரியான விடையைத்‌ தேர்க.

(A) ஒரு நண்பர்‌

(B) ஓர்‌ தோழி

(C) ஒரு அறை

(D) ஓர் நூல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

64. பிழை திருத்துதல்‌ (ஒரு – ஓர்‌).

    புத்தகம்‌

(A) ஓர்‌ புத்தகம்‌

(B)  ஒரு புத்தகம்‌

(C) ஒன்று புத்தகம்‌

(D) ஓரிரு புத்தகம்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

65. பிழை திருத்துதல்‌. சரியான பதிலைத்‌ தேர்ந்தெடு.

        மாடு

(A) ஓர் மாடு

(B) ஒரு மாடு

(C) ஒன்று மாடு

(D) ஓரோர்‌ மாடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

66. பிழையற்ற தொடரை எழுதுக.

(A) இவை நல்ல பழங்கள்‌ அன்று

 (B) இவை நல்ல பழங்கள்‌ இல்லை

(C) இவை நல்ல பழங்கள்‌ அல்ல

(D) இவை நல்ல பழங்கள்‌ அல்லை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

67. சரியான தொடரைத்‌ தேர்ந்தெடுக்க.

(A) பண்டைக்கால அரங்கேற்றுதல்‌ வழக்கம்‌ சிறந்த நூல்‌

(B) நூல்களை அரங்கேற்றுதல்‌ சிறந்த வழக்கம்‌ பண்டைக்காலம்‌

(C) சிறந்த நூல்களை அரங்கேற்றுதல்‌ பண்டைக்கால வழக்கம்‌

(D) பண்டைக்காலம்‌ சிறந்த நூல்களை அரங்கேற்றுதல்‌ வழக்கம்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

68. எவ்வகைத்‌ தொடர்‌

        என்‌ அண்ணன்‌ நாளை வருவான்‌

(A)  செய்தித்‌ தொடர்‌

(B) உணர்ச்சித்‌ தொடர்‌

(C) கட்டளைத்‌ தொடர்

‌ (D) தொகைநிலைத்‌ தொடர்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

69. சரியான கூட்டுப்‌ பெயரைத்‌ தெரிவு செய்க.

         கல்‌

(A) கல்‌ குவித்தல்‌

 (B) கற்‌ குவியல்‌

(C) கற்கள்

‌ (D) கல்‌ கூட்டம்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

70. சரியான கூட்டுப்‌ பெயரைத்‌ தெரிவு செய்க.

         புல்‌

(A) குவியல்

‌ (B) குலை

(C) போர்‌

(D) கட்டு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

71. ஆசிரியப்பாவின்‌ ஓசை எது?

(A) துள்ளல்‌ ஓசை

(B) செப்பல்‌ ஓசை

(C) அகவல்‌ ஓசை

(D) தூங்கல்‌ ஓசை

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

72. மலர்‌ உண்டு; பெயரும்‌ உண்டு.

        இரு தொடர்களையும்‌ ஒரு தொடராக்கும்‌ பொழுது எவ்வாறு அமையும்‌?

(A) மலர்‌ பெயர்‌ உண்டு

(B) மலர்‌ உண்டு பெயர்‌ உண்டு

(C) மலரும்‌ பெயர்‌ உண்டு

(D)  மலரும் பெயரும்‌ உண்டு

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : D

73. ஓடு என்ற வேர்ச்சொல்லின்‌ வினையெச்சத்‌ தொடர்‌ எது?

(A) அருணா ஓடினாள்‌

(B) ஓடிய அருணா

(C) ஓடி வந்தாள்‌

(D) அருணாவிற்காக ஓடினாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

74.  கலைச்‌ சொற்களை அறிதல்‌.

       சரியான இணையைத்‌ தேர்க.

(A)  Space Technology   –              விண்வெளித்‌ தொழில்நுட்பம்‌

(B)  Nano Technology     –              விண்வெளிக்‌ கதிர்கள்‌

(C)  Ultraviolet rays         –              மீநுண்‌ தொழில்நுட்பம்‌

(D)  Cosmic rays             –              புறஊதாக்‌ கதிர்கள்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

75. “Cosmic Rays”

        கலைச்சொல்‌ அறிதல்‌

(A)  விண்வெளிக்‌ கதிர்கள்‌

(B) அகச்சிவப்புக்‌ கதிர்கள்‌

(C)  புறஊதாக்‌ கதிர்கள்‌

(D)   அணுக்கதிர்கள்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

76. “Whirlwind” – கலைச்சொற்களை அறிதல்‌.

(A) நிலக்காற்று

(B) சுழல் காற்று

(C) கடற்காற்று

(D)  பெருங்காற்று

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

77. கூற்று காரணம்‌ – சரியா? தவறா?

    “பகர்வனர்‌ திரிதரு நகரவீதியும்‌

        பட்டினும்‌ மயிரினும்‌ பருத்தி நூலினும்‌

        கட்டு நுண்வினைக்‌ காருகர்‌ இருக்கையும்‌

         தூசும்‌ துகிரும்‌ ஆரமும்‌ அகிலும்‌

கூற்று:

1. இவ்வடிகள்‌ இடம்பெற்றுள்ள நூல்‌ சிலப்பதிகாரம்‌

2. காருகர்‌ என்பதன்‌ பொருள்‌ – சிற்பி

3. நகரம்‌ என்பதன்‌ எதிர்ச்சொல்‌ – கிராமம்‌

4. இப்பாடலில்‌ குறிப்பிடப்படும்‌ நறுமணப்‌ பொருள்‌ சந்தனமும்‌, அகிலும்‌

(A)  கூற்று (1), (4) சரி

(B)   கூற்று (1), (3) சரி

(C) கூற்று (1), (2), (3) சரி

(D) கூற்று (1), (3) சரி (4) மட்டும்‌ தவறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

78. கூற்று – காரணம்‌ சரியா? தவறா?

கூற்று 1 – ஒவ்வோர்‌ ஆண்டும்‌ ஜுன்‌-15-ஐ உலகக்‌ காற்று நாளாகக்‌ கொண்டாடி வருகிறோம்‌.

கூற்று 2 – காற்றாலை மின்‌ உற்பத்தியில்‌ இந்தியாவில்‌ தமிழகம்‌ இரண்டாமிடம்‌ என்பது எனக்குப்‌ பெருமையே.

கூற்று 3 – காற்றின்‌ ஆற்றலைப்‌ பயன்படுத்திக்‌ கடல்‌ கடந்து வணிகம்‌ செய்து அதில்‌ வெற்றி கண்டவர்கள்‌ தமிழர்‌.

(A) கூற்று 1 மட்டும்‌ சரி

 (B) கூற்று 1, 2 ஆகியன சரி

(C) கூற்று 3 மட்டும்‌ சரி

(D) கூற்று 1, 3 ஆகியன சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

79. குறில்‌ நெடில்‌ பொருள்‌ வேறுபாடு அறிக.

    கொடை – கோடை

(A) பணம் ‌-  மலை

 (B) ஈகை  –  வெயில்‌ காலம்‌

(C)  குடை – ஈகை

 (D) ஈகை –  குளிர்‌ காலம்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

80. குறில்‌ – நெடில்‌ மாற்றம்‌ பொருள்‌ வேறுபாடு

        மறி – மாறி

(A) எடுத்தல்‌ – முடிவுறுதல்

‌ (B) முடித்தல்‌ – வேறுபடுதல்‌

(C) தடுத்தல் – வேறுபடுதல்‌

(D) வழங்கல்‌ – வேறுபடுதல்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

81. குறில்‌ நெடில்‌ மாற்றம்‌ – பொருள்‌ வேறுபாடு

    வரம்‌ – வாரம்‌

(A) இரக்கம்‌ – கிழமை

(B) அருள்‌ – கிழமை

(C) பூஜை – கிழமை

(D) கிழமை – அருள்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

82. இரு பொருள்‌ தருக.

         திங்கள்‌

(A) நாள்‌ – சூரியன்‌

 (B) மாதம்‌ – நிலவு

(C) கிழமை – விண்மீன்‌

 (D) மதி – சந்திரன்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

83 ‘மதி’ – என்பதன்‌ இருபொருள்‌

(A) அறிவு, நிலவு

(B) அறிவு, சூரியன்‌

(C) இரவு, பகல்‌

(D) காகம்‌, கரும்பு

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

84. தகுந்த சொல்லால்‌ நிரப்புக.

சிறுமி – கையில்‌ மலர்களை வைத்திருந்தாள்‌.

(A) தான்

(B) தனது

(C) தாம்

(D) தன்னால்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

85. அடைப்புக்குள்‌ உள்ள சரியான சொற்களை தகுந்த இடத்தில்‌ சேர்க்க.

இடி _______ மழை வந்ததால்‌ அருவி மலையில்‌ ________ வீழ்ந்தது.

(A) உடன், இருந்து

 (B) கொண்டு, விட்டு

(C) இருந்து, உடன்‌

(D)  உடன்‌, மேல்

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

86. சரியான சொல்லால்‌ நிரப்புக.

 மரங்களை வளர்த்து _______ (ஐ)க்‌ காப்போம்‌ ________  உரங்களைத்‌ தவிர்த்து நிலவளம்‌ காப்போம்‌.

(A)  (மண்‌/வளம்‌)

(B)  (செயற்கை/இயற்கை)

(C)  (இயற்கை/செயற்கை)

(D)  (வளம்‌/மண்‌)

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

87.  சரியான இணைப்புச்‌ சொல்‌

மக்களுக்குச்‌ செய்யும்‌ பணியே இறைவனுக்குச்‌ செய்யும்‌ பணி என்று வாழ்ந்தார்‌. ________ அமைதிக்கான நோபல்‌ பரிசு அவரைத்‌ தேடி வந்தது.

சரியான இணைப்புச்‌ சொல்லை தேர்வு செய்க.

(A) அதுபோல

(B) ஏனெனில்‌

(C) அதனால்‌

 (D) ஆகையால்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : C

88.  சரியான இணைப்புச்‌ சொல்‌.

தமிழகத்தில்‌ மழை பெய்து வருகிறது. _______ இரண்டு நாள்‌ மழை நீடிக்கும்‌ என வானிலை ஆய்வு மையம்‌ அறிவிப்பு.

(A) ஏனெனில்

(B) ஆகையால்‌

(C)  மேலும்

(D) அதனால்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : C

89.  சரியான இணைப்புச்‌ சொல்லால்‌ நிரப்புக.

நாம்‌ இனிய சொற்களைப்‌ பேச வேண்டும்‌ _________  துன்பப்பட நேரிடும்‌.

(A) இல்லையென்றால்‌

(B) அதனால்‌

(C)  மேலும்

‌ (D) எனவே

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

90.  சரியான வினாச்சொல்லை தேர்ந்தெடு.

திருக்குறளை இயற்றியவர்‌ __________.

(A) யார்?

 (B) எவ்வது?

(C) யாவர்‌?

(D) எப்படி?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

91. சரியான வினாச்‌ சொல்லைத்‌ தேர்ந்தெடு.

எறும்பு பாடுபடுவது ___________.

(A) எதற்காக?

(B) ஏன்‌?

(C) எப்படி?

(D) என்ன?

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

92. பொருத்தமான காலத்தைச்‌ சுட்டுக.

கண்மணி நாளை பாடம்‌ படிப்பாள்‌.

(A) இறந்தகாலம்‌

 (B) எதிர்காலம்‌

(C) நிகழ்காலம்‌

(D) சங்ககாலம்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

93. பொருத்தமான காலம்‌ அமைத்தல்‌

அண்ணல்‌ காந்தி அன்றே சொன்னார்‌.

(A) எதிர்காலம்‌

 (B) நிகழ்காலம்‌

(C) முக்காலம்

(D) இறந்தகாலம்‌

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : D

94. பொருத்தமான காலம்‌ அமைத்தல்‌.

பூரணர்‌ இல்லம்‌ நோக்கி நடக்கின்றனர்‌.

(A) நிகழ்காலம்‌

 (B) எதிர்காலம்‌

(C) இறந்தகாலம்‌

 (D) முக்காலம்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

95. விடை வகைகள்‌

“இது செய்வாயா”? என்று வினவிய போது, “நீயே செய்‌” என்று ஏவிக்‌ கூறுவது

(A) நேர்‌ விடை

(B) ஏவல்‌ விடை

(C) மறை விடை

(D) சுட்டு விடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

96. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு

அவன்‌ திருமணத்திற்குப்‌ போயி வாரான்‌

(A) அவன் திருமணத்திற்குப்‌ போய்‌ வருகிறான்‌

(B) அவன்‌ திருமணத்திற்குப்‌ போயி வாரான்‌

(C) அவன்‌ திருமணத்திற்குப்‌ போயி வாரேன்‌

(D) அவன்‌ திருமணத்திற்குப்‌ போய்‌ வாரான்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

97. பேச்சு வழக்கிற்கு ஏற்ற எழுத்து வழக்குச்‌ சொற்களை எழுதுக.

அவனெ கூட்டிக்கிட்டு வர்றேன்‌.

(A) அவனைக்‌ கூட்டிக்கொண்டு வருகிறேன்‌

(B) அவனைக்‌ கூட்டித்தான்‌ வருவேன்‌

(C) அவனெ கூட்டிக்கினு வாரேன்‌

(D) அவனைக்‌ கூப்பிட்டு வருகிறேன்‌

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : A

98.  பேச்சு வழக்கு – எழுத்துவழக்கு – கண்டறிக.

சிறிது ஒக்காந்து போ

(A) படுத்து

(B) உட்கார்ந்து

(C)  குதித்து

(D) நடந்து

(E) விடைதெரியவில்லை

ANSWER KEY : B

99. நிறுத்தற்குறிகளை அறிதல்‌.

சரியான நிறுத்தற்குறிகளைக்‌ கொண்ட தொடரைத்‌ தேர்வு செய்க.

(A) திருக்குறள்‌ பற்றிப்‌ பேசாத புலவர்‌, இலர்‌, எழுதாத அறிஞர்‌, இலர்‌, பள்ளிப்‌பருவத்திலும்‌ திருக்குறள்‌ படிக்கப்படுகின்றது.

(B) திருக்குறள் பற்றிப்‌ பேசாத புலவர்‌ இலர்‌;  எழுதாத அறிஞர்‌, எழுத்தாளர்‌ இலர்‌. பள்ளிப்‌ பருவத்திலும்‌ திருக்குறள்‌ படிக்கப்படுகின்றது.

(C) திருக்குறள்‌, பற்றிப்‌ பேசாத புலவர்‌, இலர்‌, எழுதாத அறிஞர்‌ எழுத்தாளர்‌ இலர்‌, பள்ளிப்‌ பருவத்திலும்‌ திருக்குறள்‌ படிக்கப்படுகின்றது.

(D) திருக்குறள்‌ பற்றிப்‌ பேசாத புலவர்‌ இலர்‌. எழுதாத அறிஞர்‌ எழுத்தாளர்‌      இலர்‌; பள்ளிப்‌ பருவத்திலும்‌ திருக்குறள்‌ படிக்கப்படுகின்றது.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : B

100. நிறுத்தற்குறிகளை அறிதல்‌

சரியான நிறுத்தற்குறிகளைக்‌ கொண்ட தொடரைத்‌ தேர்வு செய்க.

(A) “இது என்னோடு பேசியதே!”, எனக்‌ கேட்டான்‌ கணியன்‌. ஆம்‌ இது பேசும்‌, பாடும்‌, வீட்டு வேலைகள்‌ செய்யும்‌.

(B) இது என்னோடு, பேசியதே, எனக்‌ கேட்டான்‌ கணியன்‌. ஆம்‌ இது பேசும்‌ பாடும்‌, வீட்டு வேலைகள்‌ செய்யும்‌,

(C) இது என்னோடு பேசியதே எனக்‌ கேட்டான்‌ கணியன்‌, ஆம்‌! இது பேசும்‌! பாடும்‌ வீட்டு வேலைகள்‌ செய்யும்‌.

(D) “இது என்னோடு பேசியதே” எனக்‌ கேட்டான்‌ கணியன்‌ ஆம்‌ இது பேசும்‌, பாடும்‌, வீட்டு வேலைகள்‌ செய்யும்‌.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY : A

TNPSC POTHU TAMIL

Leave a Comment