TNPSC Group 4 Maths Question and Answer in Tamil and English:
1) A and B can do a piece of work in 12 days, while B and C can do it in 15 days where as A and C can do it in 20 days. How long will B take to do the same work.
A) 10 days
B) 15 days
C) 30 days
D) 20 days
E) Answer not known
A மற்றும் B ஆகியோர் ஒரு வேலையை 12 நாட்களிலும் B மற்றும் C ஆகியோர் அதை 15 நாட்களிலும் A மற்றும் C ஆகியோர் அதை 20 நாட்களிலும் முடிப்பா். B என்பவா் அதை வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
A) 10 நாட்கள்
B) 15 நாட்கள்
C) 30 நாட்கள்
D) 20 நாட்கள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
2) The simple interest on a sum of money is 4/9 of the principal and the number of years is equal to the rate percent per annum then find the rate per annum.
A) 6 1/3%
B) 6 2/3%
C) 5 1/3%
D) 5 2/3%
E) Answer not known
ஒரு தொகையின் தனிவட்டியானது அசலின் 4/9 ஆகவும் மற்றும் அதன் காலமும் வட்டி வீதமும் சமம் எனில் ஆண்டு வட்டிவீதம் யாது?
A) 6 1/3%
B) 6 2/3%
C) 5 1/3%
D) 5 2/3%
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
3) If the ratios formed using the numbers 2, 5, x, 20 in the same order in proportion, then ‘x’ is
A) 50
B) 4
C) 10
D) 8
E) Answer not known
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் ‘x’ = ?
A) 50
B) 4
C) 10
D) 8
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
4) If A = 265 and B = 264 + 263 + 262 + ……+ 20
Which of the following is true?
A) B is 264 more than A
B) A and B are equal
C) B is larger than A by 1
D) A is larger than B by 1
E) Answer not known
A = 265 மற்றும் B = 264 + 263 + 262 + ……+ 20
எனில் கீழ்க்க்டவற்றில் எது சரியான கூற்று?
A) B ஆனது A யைவிட 264 அதிகம்
B) A மற்றும் B சமம்
C) B ஆனது Aயை விட 1 அதிகம்
D) A ஆனது Bயை விட 1 அதிகம்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
5) How many rectangles are there in standard chess board?
A) 204
B) 240
C) 1296
D) 1290
E) Answer not known
சதுரங்கப் பலகையில் மொத்தம் எத்தனை செவ்வகங்கள் உள்ளன?
A) 204
B) 240
C) 1296
D) 1290
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
6) If 48 men working 7 hours a day can do a work in 24 days then in how many days will 28 men working 8 hours a day can complete the same work?
A) 28 days
B) 30 days
C) 32 days
D) 36 days
E) Answer not known
48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பா் எனில், 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பா்?
A) 28 நாட்கள்
B) 30 நாட்கள்
C) 32 நாட்கள்
D) 36 நாட்கள்
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
7) The standard deviation of a date is 3. If each value is multiplied by 5 then find the new variance.
A) 3
B) 15
C) 5
D) 225
E) Answer not known
ஒரு தரவின் திட்ட விலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல், பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வா்க்கச் சராசரியைக் காண்க.
A) 3
B) 15
C) 5
D) 225
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
8) In a certain code language ‘ANIMALS’ is written as ‘SLAMINA’. How is ONLINE written in that code?
A) ENILNO
B) OLINEN
C) LNOINE
D) NNLOIE
E) Answer not known
குறியீட்டு மொழியில் ‘ANIMALS’ என்பதை ‘SLAMINA’ என குறியிட்டால் ‘ONLINE என்பதை எவ்வாறு குறியிடலாம்?
A) ENILNO
B) OLINEN
C) LNOINE
D) NNLOIE
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
9) If 5 persons can do 5 jobs in 5 days. Then 50 persons can do 50 jobs in —————– Days.
A) 1
B) 5
C) 10
D) 20
E) Answer not known
5 நபா்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பா் எனில் 50 நபா்கள் 50 வேலையை ————– நாட்களில் முடிப்பா்.
A) 1
B) 5
C) 10
D) 20
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
10) A cement factory makes 7000 cement bags in 12 days with the help of 36 machines. How many bags can be made in 18 days using 24 machines?
A) 4320
B) 2880
C) 6480
D) 7000
E) Answer not known
ஒரு சிமெண்ட் தொழிற்சாலையானது 36 இயந்திரங்களின் உதவியுடன் 12 நாட்களில் 7000 சிமெண்ட் பைகளை தயாரிக்கிறது. 24 இயந்திரங்களைப் பயன்படுத்தி 18 நாட்களில் எத்தனை சிமெண்ட் பைகளைத் தயாரிக்கலாம்.
A) 4320
B) 2880
C) 6480
D) 7000
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
11) A Cubical tank can hold 64,000 litres of water. Find the length of its side in metres.
A) 64 m
B) 8 m
C) 4 m
D) 16 m
E) Answer not known
ஒரு கனச்சதுர வடிவ நீா்த் தொட்டியானது 64,000 லிட்டா் நீா் கொள்ளும் எனில் அந்தத் தொட்டியின் பக்கத்தின் நீளத்தை மீட்டரில் காண்க.
A) 64 m
B) 8 m
C) 4 m
D) 16 m
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
12) The ratio of the volumes of two cones is 2 : 3. Find the ratio of their radii if the height of second cone is double the height of the first.
A) 2 : √3
B) 2 : 3
C) √2 : 3
D) √2 : √3
E) Answer not known
இரு கூம்புகளுடைய கன அளவுகளின் விகிதம் 2 : 3 ஆகும். இரண்டா் கூம்பின் உயரம் முதல் கூம்பின் உயரத்தைப் போல் இருமடங்கு எனில், அவற்றின் ஆரங்களின் விகிதம் காண்க.
A) 2 : √3
B) 2 : 3
C) √2 : 3
D) √2 : √3
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
13. The value of a motorcycle two years ago was Rs.70,000. It depreciates at the rate of 4% p.a. Find its present value
A) 64510
B) 64150
C) 64512
D) 64251
E) Answer not known
ஓா் ஒரு சக்கர வாகனத்தின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரூ.70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% குறைகிறது எனில் அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.
A) 64510
B) 64150
C) 64512
D) 64251
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
14. Which of the following is true?
A) A – B = A ∩ B
B) A – B = A ∪ B
C) (A ∪ B)’ = A’ ∪ B’
D) (A ∩ B)’ = A’ ∩ B’
E) Answer not known
கீழ்கண்டவற்றில் எது சரி?
A) A – B = A ∩ B
B) A – B = A ∪ B
C) (A ∪ B)’ = A’ ∪ B’
D) (A ∩ B)’ = A’ ∪ B’
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
15) —————— is the ratio of Helium – Neon mixture in the He : Ne Laser.
A) 1 : 5
B) 5 : 1
C) 1 : 10
D) 1 : 1
E) Answer not known
He : Ne லேசரில், ஹீலியல் மற்றும் நியான் கலவையின் விகிதம் —————– ஆகும்.
A) 1 : 5
B) 5 : 1
C) 1 : 10
D) 1 : 1
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
16) Find the simple interest on Rs. 25,,000 at 8% per annum for 3 years?
A) Rs. 4,500
B) Rs.5,000
C) Rs.5,500
D) Rs.6,000
E) Answer not known
ரூ. 25,000 க்கு 8% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகளுக்கு தனிவட்டி காண்க.
A) Rs. 4,500
B) Rs.5,000
C) Rs.5,500
D) Rs.6,000
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
17) If Rs. 1,600 is divided among A and B in the ratio 3 : 5 then, B’s share is
A) Rs. 480
B) Rs.800
C) Rs.1,000
D) Rs.200
E) Answer not known
ரூ.1,600 தொகையை A மற்றும் B ஆகியோர் 3:5 விகிதத்தில் பிரித்துக் கொண்டால் B ன் பங்கு
A) Rs. 480
B) Rs.800
C) Rs.1,000
D) Rs.200
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
18) For every 12 Mangoes that I buy, 3 turn out to be rotten. At this rate, how many rotten mangoes will I have if I buy 100 mangoes?
A) 24
B) 15
C) 25
D) 35
E) Answer not known
நான் வாங்கும் ஒவ்வொரு 12 மாம்பழங்களில், 3 அழுகிப் போய்விடும் எனில் நான் 100 மாம்பழங்களை வாங்கினால் எத்தனை அழுகிய மாம்பழங்கள் இருக்கும்?
A) 24
B) 15
C) 25
D) 35
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – C
19) The LCM of two numbers is 6 times their HCF. IF the HCF is 12 and one of the numbers is 36, then find the other number
A) 8
B) 48
C) 16
D) 24
E) Answer not known
இரு எண்களின் மீ.பொ.ம. (LCM) ஆனது மீ.பெ.கா.-வின் 6 மடங்காகும். மீ.பெ.கா. 12 மற்றும் ஓா் எண் 36 எனில் மற்றோர் எண்ணைக் காண்க.
A) 8
B) 48
C) 16
D) 24
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
20) L.C.M of x4 – 16, x2 – 4x + 4 is
A) (x-2)2(x+2)(x2+4)
B) (x-2)(x+2)2(x2+4)
C) (x-2)2 (x+2)2 (x2+4)
D) (x-2)(x+2)(x2+4)
E) Answer not known
x4 – 16, x2 – 4x + 4 இன் மீ.பொ.ம. ———— ஆகும்.
A) (x-2)2(x+2)(x2+4)
B) (x-2)(x+2)2(x2+4)
C) (x-2)2 (x+2)2 (x2+4)
D) (x-2)(x+2)(x2+4)
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
21) The L.C.M of 148 and 185 is
A) 690
B) 760
C) 1010
D) 740
E) Answer not known
148, 185 என்ற எண்களின் மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம)
A) 690
B) 760
C) 1010
D) 740
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – D
22) HCF of 24 x2 y3 and 16 x3 y4 is
A) 23 x3 y2
B) 32 x3 y2
C) 23 x2 y3
D) x3 y2
E) Answer not known
24 x2 y3 மற்றும் 16 x3 y4 ன் மீ.பொ.கா. —————— ஆகும்.
A) 23 x3 y2
B) 32 x3 y2
C) 23 x2 y3
D) x3 y2
E) விடைதெரியவில்லை
ANSWER KEY – C
23) If (x-6) is the HCF of x2-2x-24 and x2-kx-6 then the value of k is
A) 3
B) 5
C) 6
D) 8
E) Answer not known
x2-2x-24 மற்றும் x2-kx-6 யின் மீ.பொ.வ (x-6) எனில் k யின் மதிப்பு
A) 3
B) 5
C) 6
D) 8
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B
24) Find the value of 63% of 3 4/7
A) 2.25
B) 2.40
C) 2.50
D) 2.75
E) Answer no known
மதிப்பு காண்க 3 4/7 இன் 63%
A) 2.25
B) 2.40
C) 2.50
D) 2.75
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – A
25) Ranjith’s total income was Rs. 7,500. He saved 25% of his total income, find the amount saved by him
A) Rs. 2500
B) Rs.1875
C) Rs. 5625
D) Rs. 5000
E) Answer not known
இரஞ்சித்ததின் மாத வருமானம் ரூ.75000 அதில் 25% ஐ சேமித்தாா் எனில் அவா் சேமித்த தொகை
A) Rs. 2500
B) Rs.1875
C) Rs. 5625
D) Rs. 5000
E) விடை தெரியவில்லை
ANSWER KEY – B