TNPSC MATHS QUESTIONS – DIRECT AND INVERSE PROPORTION
1) பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3 ½ கி.கி. எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை___________
A) 20 கி.கி.
B) 21 கி.கி.
C) 22 கி.கி.
D) 19 கி.கி.
ANSWER KEY: B
2) ஒரு மகிழுந்து 60 கி.மீ. தூரத்தைக் கடக்க 3 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. அதே மகிழுந்து 200 கி.மீ. தூரத்தைச் சென்றடைய, தேவையான பெட்ரோலின் அளவு_____________
A) 10 லி
B) 12 லி
C) 13 லி
D) 9 லி
ANSWER KEY: A
3) 7 மீ அளவுள்ள துணியின் விலை ₹ 294 எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை _____________
A) ₹ 200
B) ₹ 205
C) ₹ 210
D) ₹ 215
ANSWER KEY: C
4) குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை_____________
A) 360
B) 350
C) 400
D) 460
ANSWER KEY: A
5) ஒரு உணவு விடுதியின் 3 ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 120 ஆட்கள் 8 முறை மின் தூக்கி (இயங்கு ஏணி)யில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். மின் தூக்கி, 12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்குச் சென்றிருப்பர்?
A) 175
B) 170
C) 160
D) 180
ANSWER KEY: D
6) 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?
A) 40 மீ.
B) 42 மீ.
C) 30 மீ.
D) 36 மீ.
ANSWER KEY: A
7) ஒரு அஞ்சற்காரர் 738 கடிதங்களை 6 மணி நேரத்தில் முகவரிப்படி பிரித்து விடுகிறார் எனில், அவர் 9 மணி நேரத்தில் எத்தனை கடிதங்களைப் பிரிப்பார்?
A) 1107
B) 1170
C) 1017
D) 1071
ANSWER KEY: A
8) அரை மீட்டர் துணியின் விலை ₹ 15 எனில், 8 1/3 மீ நீளமுள்ள துணியின் விலை எவ்வளவு?
A) ₹ 240
B) ₹ 250
C) ₹ 220
D) ₹ 230
ANSWER KEY: B
9) தாமரை வாடகைப் பணமாக ₹ 7500 ஐ 3 மாதங்களுக்குச் செலுத்துகிறார் எனில், அதே போல அவர் ஒரு வருடத்திற்குச் செலுத்த வேண்டிய வாடகைப் பணம் எவ்வளவு?
A) ₹ 25,000
B) ₹ 28,000
C) ₹ 30,000
D) ₹ 32,000
ANSWER KEY: C
10) 30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்?
A) 20 1/2
B) 21 1/2
C) 22 1/2
D) 23 1/2
ANSWER KEY: C
11) வள்ளி 10 பேனாக்களை ₹ 108 க்கு வாங்குகிறார். கமலா 8 பேனாக்களை ₹ 96 க்கு வாங்குகிறார். இருவரில் யார் குறைவான விலைக்குப் பேனாக்களை வாங்கினர்?
A) வள்ளி
B) கமலா
C) இருவரும் ஒரே விலைக்கு வாங்கினர்
D) எதுவுமில்லை
ANSWER KEY: A
12) 3 புத்தகங்களின் விலை ₹ 90 எனில் 12 புத்தகங்களின் விலை
A) ₹ 300
B) ₹ 320
C) ₹ 360
D) ₹ 400
ANSWER KEY: C
13) மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ₹ 75 க்கு வாங்குகிறார் எனில், அவர் ₹ 105 க்கு ______________ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்.
A) 6
B) 7
C) 8
D) 5
ANSWER KEY: B
14) ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை ____________ நிமிடங்களில் நிரப்பும்.
A) 32
B) 30
C) 22
D) 35
ANSWER KEY: A
15) 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்களில் முடிப்பார்கள் எனில், அதே வேலையை 4 நாள்களில் முடிக்கத் தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை____________
A) 70
B) 80
C) 65
D) 85
ANSWER KEY: B
16) ஒரு தோட்டத்தைக் களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?
A) 24
B) 26
C) 18
D) 20
ANSWER KEY: C
17) நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ/மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு?
A) 4 கி.மீ/மணி
B) 16 கி.மீ/மணி
C) 3 கி.மீ/மணி
D) 15 கி.மீ/மணி
ANSWER KEY: A
18) ஒரு பொம்மை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை 36 இயந்திரங்களைக் கொண்டு 54 நாள்களில் மகிழுந்து பொம்மைகளை உற்பத்தி செய்கிறது. அதே அளவிலான மகிழுந்து பொம்மைகளை 81 நாள்களில் உற்பத்தி செய்ய எத்தனை இயந்திரங்கள் தேவை?
A) 25
B) 26
C) 22
D) 24
ANSWER KEY: D
19) 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய __________ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.
A) 15
B) 18
C) 6
D) 8
ANSWER KEY: C
20) 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக் கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை __________ நாள்களில் செய்து முடிப்பர்.
A) 7
B) 8
C) 9
D) 10
ANSWER KEY: B
21) 7 கி.கி. வெங்காயத்தின் விலை ₹ 84 எனில் ₹ 180 க்கு வாங்கிய வெங்காயத்தின் எடை ___________ கி.கி. ஆகும்.
A) 15
B) 18
C) 17
D) 16
ANSWER KEY: A
22) 7 கி.கி. வெங்காயத்தின் விலை ₹ 84 எனில் 3 கி.கி. வெங்காயத்தின் விலை என்ன?
A) ₹ 30
B) ₹ 32
C) ₹ 34
D) ₹ 36
ANSWER KEY: D
23) தமிழ்ச்செல்வன் ₹ 5000 ஐ மூன்று மாதத்திற்கு ஒரு முறை வங்கிக்கணக்கில் சேமித்து வருகிறார். அவர் ₹ 1,50,000 ஐ சேமிக்க எத்தனை வருடங்களாகும்?
A) 60 மாதங்கள்
B) 90 மாதங்கள்
C) 70 மாதங்கள்
D) 80 மாதங்கள்
ANSWER KEY: B
24) ஓர் அச்சு இயந்திரம் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை 1 நிமிடத்தில் 30 பக்கங்கள் என அச்சிடுகிறது. அவ்வச்சு இயந்திரம் அதே புத்தகத்தை 1 நிமிடத்தில் 25 பக்கங்கள் என அச்சிட்டால், அச்சிட்டு முடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்?
A) 10 நிமிடங்கள்
B) 11 நிமிடங்கள்
C) 12 நிமிடங்கள்
D) 15 நிமிடங்கள்
ANSWER KEY: C
25) 6 பழரசப் பாட்டில்களின் விலை ₹ 210 எனில், 4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன?
A) ₹ 140
B) ₹ 130
C) ₹ 120
D) ₹ 110
ANSWER KEY: A