TNPSC Age Problem Questions and Answers

TNPSC Age Problem Questions and Answers

karkandu kanitham study materials

1) தாயின் வயதானது மகளின் வயதைக் காட்டிலும் 20 அதிகம்.   4 வருடங்களுக்கு முன்பு தாயின் வயதானது, மகளின் வயதைப் போல் 5 மடங்கு எனில் தற்போது மகளின் வயது

A) 9

B) 12

C) 18

D) 16

ANSWER KEY: A

 

2) முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது, முரளியின் வயதைப் போல் மும்மடங்காக இருந்தது. முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயதினைக் காண்க.

A) 16, 32

B) 15, 30

C) 20, 40

D) 17, 34

ANSWER KEY: C

 

3) ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?

A) 42

B) 40

C) 45

D) 48

ANSWER KEY: B

 

4) ராமின் வயது அவரது மகள் நந்தினியின் வயதைப் போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமின் வயது மகளின் வயதை போல் 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதுகள் என்ன?

A) 5, 35

B) 6, 42

C) 9, 63

D) 10, 70

ANSWER KEY: D

 

5) P மற்றும் Q – ன் தற்போதைய வயதுகளின் விகிதம் 2 : 3. மேலும் அவர்கள் வயதுகளின் வித்தியாசம் 8 ஆண்டுகள் எனில் P – ன் தற்போதைய வயது ___ ஆண்டுகள்.

A) 16

B) 24

C) 12

D) 30

ANSWER KEY: A

 

6) ராணி மற்றும் மேரி ஆகியோரின் வயதுகளின் கூடுதல் மேரி மற்றும் நான்ஸி ஆகியோரின் வயதுகளின் கூடுதலைக் காட்டிலும் 14 வருடங்கள் அதிகம் எனில் நான்ஸியானவர் ராணியைக் காட்டிலும் எத்தனை வயது சிறியவர் எனக் கண்டுபிடி.

A) 12

B) 16

C) 14

D) 28

ANSWER KEY: C

 

7) தற்போது அருணின் வயது அவனது தந்தையின் வயதில் பாதி.              12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதைப் போல் மூன்று மடங்கு எனில், தற்போதைய அருணின் வயது என்ன?

A) 24

B) 48

C) 36

D) 12

ANSWER KEY: A

 

8) ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயாரின் வயதில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது, அவர் தாயாரின் வயதில் பாதியாக உள்ளது. தாயாரின் தற்போதைய வயது என்ன?

A) 42

B) 40

C) 45

D) 48

ANSWER KEY: B

 

9) B யை விட A மூத்தவர்,  C என்பவர் B யை விட மூத்தவராகவும் A யை விட இளையவராகவும், D என்பவர் E மற்றும் B யை விட இளையவராகவும்,         B என்பவர் E யை விட மூத்தவராகவும் உள்ளனர். எனில் இதில் மிகவும் இளையவர் யார்?

A) A

B) B

C) C

D) D

ANSWER KEY: D

 

10) A , B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4 : 5.    5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 5 : 6 எனில், இருவரின் தற்போதைய வயதின் கூடுதல்

A) 55 வருடங்கள்

B) 45 வருடங்கள்

C) 35 வருடங்கள்

D) 25 வருடங்கள்

ANSWER KEY: B

 

11) லதா, சுனிதாவை விட ஒரு வயது பெரியவர். சுனிதா, பிந்துவை விட 2 ஆண்டுகள் பெரியவர். ராஜன், பிந்துவை விட ஒரு வயது பெரியவர் எனில் மூவரில் யார் சிறியவர்?

A) சுனிதா

B) லதா

C) பிந்து

D) ராஜன்

ANSWER KEY: C

 

12) மகன் மற்றும் தகப்பனின் தற்போதைய வயதின் கூட்டுத்தொகை 72.          12 வருடங்களுக்கு பிறகு தகப்பனின் வயது மகனின் வயதில் 3 மடங்கு என்றால், மகனின் தற்போதைய வயதை காண்க.

A) 12

B) 22

C) 14

D) 16

ANSWER KEY: A

 

13) ஒரு பையனின் தற்போதைய வயது அவனது தங்கையின் வயதைப் போல் இரு மடங்கு. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவனது வயது அவன் தங்கையின் வயதைப் போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன?

A) 18 , 9

B) 14 , 7

C) 16 , 8

D) 12 , 6

ANSWER KEY: C

 

14) இன்று அபியின் வயது ரீட்டாவின் வயதைப் போல இரு மடங்கு.           7 வருடங்களுக்குப் பின்னர் அவர்களின் வயது வித்தியாசம் 5 எனில் ரீட்டாவின் இன்றைய வயது என்ன?

A) 5

B) 7

C) 9

D) 10

ANSWER KEY: A

 

15) தற்போது ஒரு தந்தையின் வயது அவரது மகன் வயதைப் போல் இரு மடங்கு. இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயது மகனின் வயதைப் போல ஆறு மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன?

A) 60 , 30

B) 40 , 20

C) 58 , 29

D) 50 , 25

ANSWER KEY: D

 

16) ஷர்மாவின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில்      கால் பாகமாகும். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது ஷர்மாவின் வயதைப் போல் ஏழு மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதைக் காண்க.

A) 8 , 32

B) 10 , 40

C) 12 , 48

D) 14, 56

ANSWER KEY: C

 

17) தகப்பன் மற்றும் மகனுடைய தற்போதைய வயதிற்கிடையேயான விகிதம் 19 : 5.    4 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது 3 : 1 என்ற விகிதம் என்றால் இருவரின் தற்போதைய வயதின் கூட்டுத்தொகை காண்க.

A) 40

B) 42

C) 48

D) 52

ANSWER KEY: C

TNPSC AGE PROBLEM QUESTIONS

Leave a Comment